முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூடுபிடித்த அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர் விவாதம்

புதன்கிழமை, 5 அக்டோபர் 2016      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்  - அமெரிக்க துணை அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாத நிகழ்வில் ஜனநாயக் கட்சி, குடியரசுக் கட்சியின் இரு வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.  இந்த விவாத நிகழ்வு செவ்வாய்க்கிழமை அமெரிக்க வர்ஜீனியா மாகாணத்தில் லாங்க்வுட் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. துணை அதிபர் வேபாளர்களுக்கான முதல் விவாத நிகழ்வில் ஜன நாயக கட்சியின் சார்பாக டிம் கைன்னும், குடியரசுக் கட்சியின் சார்பாக மைக் பென்ஸும் பங்கேற்றனர்.

துணை அதிபர் வேட்பாளர்களுக்கான முதல் விவாதமே மோதல் மற்றும் இடையூறுகளுடன் நடந்து முடிந்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் கிளிண்டனுக்கும் ஆதரவாக டிம் கைன்னும், குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்புக்கு ஆதரவாக மைக் பென்ஸும் தங்களது வாதத்தை முன் வைத்தனர். விவாதத்தின் முக்கிய அம்சமாக அமெரிக்காவின் பாதுகாப்பு, குடியுரிமை விவகாரம் மற்றும் பல முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டது.

விவாதத்தில் பங்கேற்ற டிம் கைன், "அதிகாரமிக்க அமெரிக்க அதிபராவதற்கு முழு தகுதியும் ஹிலாரிக்குதான் உள்ளது. டொனால்டு டிரம்பை அதிபர் இடத்தில் வைப்பது என்பது மரண பயத்தைதான் தருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்புக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு அமெரிக்கா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. நாங்கள் ஒவ்வொரு மணி நேரமும் சிரியாவின் போர் சூழலை கண்காணித்து வருகிறோம்" என்றார். இதற்கு இடைமறித்து பேசிய மைக் பென்ஸ் "மத்திய கிழக்கு நாடுகளில் ஐ.எஸ் ஆதிக்கம் அதிகரித்து வருவதை கவனிக்கவில்லையா" என்று கூறினார்.

டொனால்டு டிரம்ப் ஏன் வருமான வரி கணக்குகளை பற்றி டிம் கைன் கேட்ட போது மீண்டும் இடைமறித்த மைக் பென்ஸ் டொனால்டி டிரம்பின் புதிய வரி கொள்கைகளை பற்றி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறு சூடு பறக்க விவாதம் நடந்து முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago