முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 5 டன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2017      கோவை

கோவை மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 5 டன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது

 கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது நுஉழ-கசநைனெடல டீயபள உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   உத்தரவின் பேரில் உதவி நகர்நல அலுவலர்  தலைமையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள ராஜ வீதி மற்றும் தாமஸ் வீதியில் பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் 50 மைக்ரான் குறைவாக உள்ள சுமார் 5 டன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது நுஉழ-கசநைனெடல டீயபள உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருமுறையே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை மக்கள் முறையின்றி கண்ட இடங்களில் எறியப்படுவதாலும் அவை மக்கும் தன்மை இல்லாததாலும் அவற்றால் சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று 21.03.2017-ம் தேதி உதவி நகர்நல அலுவலர்  தலைமையில் சுகாதார அலுவலர்கள் மற்றம் ஆய்வாளர்களுடன் ராஜ வீதி மற்றும் தாமஸ் வீதியில் உள்ள பிளாஸ்டிக் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது ஈ 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் சுமார் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள 5 டன் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்யப்பட்டது. கடை உரிமையாளரிடம் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக துணிகளால் ஆன பைகள் அல்லது நுஉழ-கசநைனெடல டீயபள உபயோகிக்குமாறு மாநகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தினார்.

மேலும், வருகின்ற மார்ச் மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் ஆர்.எஸ்.புரத்திலுள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் பிளாஸ்டிக் அல்லாத மாற்று பொருட்களுக்கான கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பை கடை விற்பனை உரிமையாளர்கள், பாலித்தீன் பை விற்பனை சங்கத்தின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள், கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளுமாறு மாநகராட்சி ஆனையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   கேட்டுக்கொள்கிறார்.

மேலும், வரும் மே-1ம் தேதியிலிருந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஈ 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் முற்றிலுமாக தடைசெய்யப்படவுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஈ 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆகவே, தடைசெய்யப்பட்ட ஈ 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தகவல் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்  போது மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்