எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதிப்பும், மரியாதையும் மிக்கது மருத்துவப்பணி. மாணவர்களின் கனவுக்கல்வி எம்.பி.பி.எஸ்! பிளஸ்-2 உயிரியல் பாடப்பிரிவு படித்தவர்கள் இப்படிப்பை தேர்வு செய்து படிக்கலாம். எம்.எஸ்., எம்.டி. போன்ற முதுகலை மருத்துவ படிப்புகளும் உள்ளன. இதற்கு தனி நுழைவுத் தேர்வு இருக்கிறது. இத்தேர்வு எழுதாதவர்கள் எச்.ஐ.வி., நியூட்ரிஷியன், அவசர கால மருத்துவம், கிளினிகல் ரிசர்ச் போன்ற ஓராண்டு படிப்புகளை படிக்கலாம். பயோடெக்னாலஜி, மெடிக்கல்நானோ டெக்னாலஜி போன்ற பாடப்பிரிவுகளில் எம்.டெக். படிப்பும் இருக்கிறது. படித்தவுடன் ஏராளமான பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
பல் மருத்துவ படிப்பு (பி.டி.எஸ்.) மருத்துவம் சார்ந்த படிப்புகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இது 5 ஆண்டுகால படிப்பு. பல் மருத்துவம், பல் அழகுபடுத்துதல் இதில் முக்கியமானது. இவர்களுக்கு நல்ல பணிவாய்ப்பு இருக்கிறது. படித்து முடித்தவர்கள் சொந்தமாக கிளினிக் நடத்தவும் தகுதி வாய்ந்தவர்கள் ஆகிறார்கள். டென்டல் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், ஆய்வுக் கூடம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் கிடைக்கும்.
நர்சிங் (செவிலியர்) பணிக்கும் உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளை படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்கு பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு.
ஒரு மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், அதன் குணாதிசயம், பக்க விளைவு பற்றி படிப்பது பார்மஸி (மருந்தாளுனர்). 2 ஆண்டு டிப்ளமோ படிப்பு, 4 ஆண்டு பட்டப்படிப்பு இருக்கிறது. மருத்துவத் துறையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த படிப்பை படிப்பவர்களுக்கு மருத்துவமனை, ஆராய்ச்சிக்கூடங்கள், மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. முதுநிலை பட்டப்படிப்பு முடித்தால் வாய்ப்புகள் ஏராளம். மெடிக்கல் ஷாப் வைப்பதற்கு பார்மஸி படித்திருக்க வேண்டும்.
இந்தியாவின் இயற்கை மருத்துவத்தைப் பற்றிய படிப்பு சித்தமருத்துவம். உணவுப்பொருளை மருந்தாகப் பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமுறை இது. தற்போது மதிப்பு பெருகும் மருத்துவமாக இது உள்ளது.
பி.எஸ்.எம்.எஸ். என குறிப்பிடப்பட்டு இம்மருத்துவ பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. தாம்பரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட்டில் முதுநிலை சித்தமருத்துவம் படிக்கலாம். இவர்களுக்கும் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. சொந்தமாக மருந்து தயாரித்தும் விற்கலாம்.
பி.ஏ.எம்.எஸ். எனப்படும் ஆயுர்வேதமும் இந்தியாவின் பாரம்பரிய மருத்துவம். பக்க விளைவற்ற இம்மருத்துவ முறைக்கு மவுசு அதிகரித்துள்ளது. 5 ஆண்டு பட்டப்படிப்பு, ஆயுர்வேதிக் பார்மசி என்ற டிப்ளமோ (2 ஆண்டு) படிப்பு இருக்கிறது. நெல்லை, சென்னை அரசு கல்லூரிகளில் படிக்கலாம். ஜெய்ப்பூரில் ஹஆயுர்வேதா நர்சிங் அண்ட் பார்மசி' என்ற ஒன்றரை வருட டிப்ளமோ படிப்பும், ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் ஹடிப்ளமோ இன் ஹெர்பல் மெடிசின்' என்ற ஓராண்டு படிப்பும் கற்பிக்கப்படுகிறது.
மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதன் மர்மத்தை ஆராய்ந்து சிகிச்சை அளிப்பது இதன் பணி. எந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.
கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றி படிப்பது ஆப்டோமெட்ரி. இதில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் 4 ஆண்டு இளநிலைப் படிப்புகள் உள்ளன. பணிவாய்ப்புகளும் தாராளம். பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவ படிப்பு ஆடியாலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம் படுத்தி முறைப்படுத்தும் ஹஸ்பீச் தெரபி' படிப்பும் உள்ளது. உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது ரேடியோகிராபி படிப்பு. ரேடியோ தெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
மெடிக்கல் லேப் டெக்னாலஜி மருத்துவ துறையில் முக்கியமான படிப்பு. நோயை கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்பு (பி.எம்.எல்.டி.) கள் உள்ளன. மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்களில் பணிவாய்ப்புகள் ஏராளம் இருக்கிறது.
இவை தவிர மருத்துவதுறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகள் ஏராளம் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 5 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 5 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 6 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-03-2025.
13 Mar 2025 -
ஸ்பேடெக்ஸ் செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக விடுவித்து இஸ்ரோ சாதனை
13 Mar 2025புதுடெல்லி, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது ஸ்பேடெக்ஸ் பரிசோதனையின் ஒரு பகுதியாக இரண்டு செயற்கைக் கோள்களை விடுவிக்கும் சோதனையை வெற்றிகரமாக நிறைவே
-
த.வெ.க. வில் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 140ஆக உயர்த்த விஜய் முடிவு?
13 Mar 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 120ல் இருந்து 140ஆக உயர்த்த விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வரும் 22-ம் தேதி சென்னையில் நடைபெறும் தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்கிறார் டி.கே. சிவகுமார்
13 Mar 2025பெங்களூரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கூட்டி உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் கர்நாடகா சார்பில் டி.கே. சிவகுமார் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கியூட் தேர்வுக்கான வழிகாட்டுதல்கள்: தேசிய தேர்வு முகமை வெளியிட்டது
13 Mar 2025புதுடில்லி, முதுகலை பட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு (கியூட்) க்கான முக்கிய வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ. வெளியிட்டுள்ளது.
-
தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தில் பங்கேற்க ரேவந்த் ரெட்டி முடிவு
13 Mar 2025புதுடில்லி, தொகுதி மறுசீரமைப்பு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
-
1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு
13 Mar 2025சென்னை, தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
டெல்லியில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
13 Mar 2025புதுடெல்லி, டெல்லியில் உள்ள தனியார் ஹோட்டலில் பிரிட்டன் சுற்றுலா பயணி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
பள்ளிக் கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு
13 Mar 2025சென்னை, தமிழ்நாடு ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நாமக்கல், மதுரை, புதுக்கோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை நடைபெறவுள்ளது.
-
கேரளாவில் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போராட்டம்
13 Mar 2025திருவனந்தபுரம், கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.
-
புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு
13 Mar 2025புதுச்சேரி, அமைச்சர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி சட்டசபையில் இருந்து தி.மு.க., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
-
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
13 Mar 2025சென்னை, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை, தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.
-
இ.பி.எஸ். உடன் ஒரே மேடையில் விவாதிக்க தயார்: அமைச்சர் ரகுபதி
13 Mar 2025சென்னை, இ.பி.எஸ். அழைத்தால் நானே ஒரே மேடையில் விவாதிக்க தயார் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்..
-
எச்சில் இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு
13 Mar 2025மதுரை, கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளத
-
போர் நிறுத்தத்தை ஏற்காவிட்டால்... ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
13 Mar 2025வாஷிங்டன், சவுதி அரேபியாவில் நடந்த அமெரிக்கா - உக்ரைன் பேச்சுவார்த்தையில் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ள ஒருமாத போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டால் ரஷ்யா குறிப்பிடத்
-
சென்னையில் சோக சம்பவம்: 5 கோடி ரூபாய் கடன் தொல்லையால் மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை
13 Mar 2025சென்னை, சென்னை அண்ணாநகரில் மருத்துவர் அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  
-
தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் வானிலை மையம் எச்சரிக்கை
13 Mar 2025சென்னை: கோடை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், வெயிலுக்கு இதமாக தமிழ்நாட்டின் அனேக இடங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
-
தனியார் பால், தயிர் விலை உயர்வு: விலை உயர்வை உடனே திரும்பப்பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல்
13 Mar 2025சென்னை, விலை உயர்வை திரும்பப் பெற பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
-
வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
13 Mar 2025சென்னை, வெற்று விளம்பரங்களால் மக்கள் வயிற்றை நிரப்ப முடியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
முதல்முறை தமிழகத்தில் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது ஏன்..?
13 Mar 2025சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
-
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மின்சார ஆட்டோக்களை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
13 Mar 2025சென்னை, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 50 மின் ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
தொழில்நுட்ப உபகரணங்கள் கொள்முதலில் முறைகேடு: கோவை பாரதியார் பல்கலை. முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் வழக்கு
13 Mar 2025கோவை: கோவை பாரதியார் பல்கலையில் தொழில்நுட்ப உபகரணங்களில் முறைகேடு நடந்ததாக முன்னாள் துணை வேந்தர் உள்பட 16 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
சத்துணவு ஊழியா்களின் தணிக்கை தொகை ரூ.257 கோடி தள்ளுபடி: தமிழக அரசு உத்தரவு
13 Mar 2025சென்னை, சத்துணவு மைய ஊழியா்களிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டிய ரூ.257.83 கோடிக்கான தணிக்கைகளை முழுமையாகத் தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  
-
2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என எதிர்பார்ப்பு
13 Mar 2025சென்னை: தமிழக சட்டபேரவை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் 2025-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.