எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
Source: provided
பிளஸ் -2 படித்தவர்கள் டாக்டருக்கு படிப்பது என்றால் அலோபதி மருத்துவமான எம்.பி.பி.எஸ் மட்டுமே என நினைக்கிறார்கள். ஆனால் மருத்துவ படிப்பு என்பது இன்று பல துறைகளாக பிரிந்து தனித்தனிப் பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன. ஆடியாலஜி, ஆப்ட்டோமெட்ரி போன்ற மருத்துவ படிப்புகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்புகள் அதிகம் உள்ள துறைகளாக இருக்கின்றன. அவற்றில் சித்தா, ஆயுர்வேதம் போன்ற படிப்புகள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்ற துறையாகும்.
சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஹோமியோபதி மருத்துவப் படிப்புகள் : நவீன மருத்துவத்திற்கு இணையாக சமீப காலங்களில் இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் தேவை அதிகரித்து உள் ளது. சமீபத்திய உதாரணம் டெங்கு சிகிச்சை. கடந்த நவம்பர் மாதத்தில் டெங்கு காய்ச்சலால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பப்பாளி இலைச்சாறு, நில வேம்புக் கஷாயம் போன்ற பாரம் பரிய மருந்துகளைப் பயன்படுத்திய பிறகே நிலைமை கட்டுக்குள் வந்தது.
தமிழகத்தில் பாளையங்கோட்டை, சென்னை ஆகிய இடங்களில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை சித்த மருத்துவப் பட்டப்படிப்பு உள்ளது. பி.ஏ.எம்.எஸ். என்ற 5 ஆண்டு ஆயுர்வேத மருத்துவ படிப்பு சித்த மருத்துவக் கல்லூரியிலேயே உள்ளது. இது தவிர ஆயுர்வேத மருத்துவத்திற்கென்றே தனியார் ஆயுர்வேத பல்கலைக்கழகங்களும் உள்ளன. ஜெய்ப்பூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆயுர்வேதா கல்வி நிலையத்தில் டிப்ளமோ இன் ஆயுர்வேதிக் பார்மஸி என்ற 2 ஆண்டு படிப்பு, டிப்ளமோ இன் ஆயுர்வேதா நர்ஸிங் என்ற 18 மாதப் படிப்பும் உள்ளன. ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் டிப்ளமோ இன்ஹெர்பல் மெடிசின் என்ற ஓராண்டு டிப்ளமோ படிப்பு உள்ளது. நவீன மருத்துவத்திற்கு அடுத்து, பிரபலமாக இருப்பது ஹோமியோபதி. ஐந்தரை ஆண்டு படிப்பு இது. எளிய மருத்துவ சிகிச்சை என்பதால், இந்த மருத்துவ முறை தற்போது பிரபலமாகி வருகிறது. எனவே, இந்தப் படிப் பில் சேருவதிலும் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மதுரையை அடுத்த திருமங்கலத்தில் அரசு ஹோமியோபதி கல்லூரி உள்ளது. இது தவிர, தனியார் ஹோமியோபதி கல்லூரிகளும் உள்ளன.
ஆடியாலஜி : பி.ஏ.எஸ்.எல்.பி. என்பது ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் அண்ட் லாங்க்வேஜ் பேத்தாலஜியில் 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு. பேச்சு மற்றும் செவித்திறன் கோளாறுகளைக் கண்டறிவது தொடர்பான மருத்துவப் படிப்பு. எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம், ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், விநாயகா மிஷன் பல்கலைக்கழகங்களில் இந்தப் படிப்பு உள்ளது. சண்டீகரில் உள்ள போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுக்கேஷன் அண்ட் ரிசர்ச் கல்வி நிலையத்தில் பிஎஸ்சி ஆடியாலஜி படிப்பு உள்ளது. காது கேட்கும் கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்.
ஆப்ட்டோமெட்ரி : கண்களின் அமைப்பு, செயல்பாடுகளைப் பற்றிய படிப்பு இது. கண் மருத்துவமனைகளில் கண் டாக்டர் களுக்கு உதவியாளர்களாக இவர்களால் செயல்பட முடியும். ரிப்ராக்டிவ் எரர் என்று சொல்லப்படும் கிட்டப் பார்வை, தூரப் பார்வை உடையவர்கள் என்ன மாதிரியான கண்ணாடிகளை அணிய வேண்டும் என்பது உட்பட கண் தொடர்பான கோளாறுகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதற்கு முன் அனைத்துப் பரிசோதனைகளையும் செய்து ரிசல்ட் தருபவர்கள் இவர்கள். அரசு கண் மருத்துவமனைகள் தவிர, அகர்வால் கண் மருத்துவமனையில் பி.எஸ்சி. 4 ஆண்டு படிப்பும் டிப்ளமோ 2 ஆண்டு படிப்பும் உள்ளன. தலா 40 இடங்கள் உள்ள இந்தப் படிப்பில் சேர பிளஸ் டூ தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அறிவியலை சிறப்புப் பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும். சங்கர நேத்ராலயா மருத்துவமனை யில் ஆபரேஷன் தியேட்டர் அனஸ்தீசியா டெக்னாலஜி, ரிப்ராக்ஷன், ஆப்தால்மிக் நர்சிங் அசிஸ்டெண்ட் ஆகியவற்றில் 2 ஆண்டு டிப்ளமோ படிப்புகளும் மெடிக்கல் லேப் டெக்னாலஜி என்ற 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பும் உள்ளன. இந்தப் படிப்புகளுக்கு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் சான்றிதழ்களை வழங்கும்.
ரேடியோகிராபி : மருத்துவத்தின் உட்பிரிவான இந்தப் படிப்பு படித்தவர்களை ரேடியாலஜிஸ்ட் என்று கூறுவார்கள். எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. போன்ற பரிசோதனைகள் செய்வது இவர்கள்தான். உடல் உள்உறுப்புகள் எப்படி உள்ளன, என்ன மாதிரியான கோளாறுகள் உள்ளன, அதன் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பது போன்றவற்றை துல்லியமாக அறிந்து, ரிப்போர்ட் செய்வது தொடர்பான படிப்பு இது. அதனால், டாக்டர்கள் படிக்கும் உடற்கூறியல் பாடம் போல இவர்களுக்கும் உடல் உறுப்புகள் குறித்து முழுவதும் கற்றுத் தரப்படுகிறன. நவீன மருத்துவத்தின் தலைநகரமாக இந்தியா இருப்பதால், சர்வதேசத் தரம் வாய்ந்த பரிசோதனைக் கூடங்கள் இங்கும் வந்து விட்டன. எனவே, இந்தப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
ஸ்பீச் தெரபி : பேசுவதில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வது குறித்து இந்தப் படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் உட்பட பல தன்னாட்சி பெற்ற மருத்துவமனைகளில் ஸ்பீச் தெரபி பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு உள்ளது.
தேவையான படிப்பை தேர்ந்தெடுத்து ஏழை மக்களுக்கு இலவச பணி செய்ய மாணவ–மாணவிகள் முன்வர வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி அமைச்சர் சேகர்பாபு குற்றச்சாட்டு
05 Feb 2025சென்னை: தி.மு.க. ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்த பா.ஜ.க.வினர் முயற்சி செய்வதாக அமைச்சர் சேகர்பாபு குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மதிப்புமிக்க வாக்குகளை பதிவு செய்யுங்கள்: டெல்லி வாக்குகளர்களுக்கு பிரதமர் மோடி கோரிக்கை
05 Feb 2025புதுடெல்லி: முதல் முறையாக வாக்களிக்கப் போகும் அனைத்து இளைய தலைமுறையினருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
யு.ஜி.சி.யின் வரைவு விதிமுறைகளை எதிர்த்து மாநாடு: தமிழகம் உள்பட 7 மாநில அமைச்சர்கள் பங்கேற்பு
05 Feb 2025பெங்களூரு: துணை வேந்தர்களை நியமிக்க கவர்னருக்கு அதிகாரம் வழங்கும் முடிவுக்கு எதிராக உயர்கல்வி அமைச்சர்கள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடந்தது.
-
டெல்லி வாக்காளர்களுக்கு அமித்ஷா வேண்டுகோள்
05 Feb 2025புதுடெல்லி: தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசாங்கத்தை அமைக்க வாக்களியுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு 3 ஆசிரியர்கள் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
05 Feb 2025சென்னை : பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தன்னை கொல்ல சதி நடந்தால்.... ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
05 Feb 2025வாஷிங்டன் : டிரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வந்ததையடுத்து அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு
05 Feb 2025பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடர் பிப்.8ஆம் தேதி தொடங்குகிறது.
-
மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
05 Feb 2025திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர், சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்ல அனுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர