முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் விடுதிகள் இல்லங்கள் பதிவு செய்தல் குறித்த கண்காணிப்பு குழு ஆலோசனை கூட்டம்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      கரூர்
Image Unavailable

 

வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள் வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள் ஆகியோர் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளதா? அவை விதிமுறைகளுக்குட்பட்டு இயங்குகின்றனவா? என்பதனை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டம்

 அக்கண்காணிப்பு குழு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் 09.05.2017 அன்று மாலை 4.00 மணியளவில் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இ மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து விடுதிகள் மற்றும் இல்லங்கள் இ தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் சட்டத்தின் பதிவு செய்யப்பட்டுள்ளதை துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும் எனவும் அவை காலாண்டிற்கொருமுறை ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை அனுப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

 இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தங்கமணிஇ துணை இயக்குநர் (சுகாதாரம்) நளினிஇ முதன்மை கல்வி அலுவலர்இ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கவிதாஇ மாவட்ட தொழிலாக நல அலுவலர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்