முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரிய மொழியில் திருக்குறள் நூல்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 23 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ரூ.36 லட்சம் செலவில் கொரிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

இது தொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ,

'' மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 29.9.2015-ஆம் நாளன்று தமிழக சட்டப்பேரவை விதி எண் 110-இன் கீழ் 'தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பின் அடிப்படையிலும் திருக்குறளைக் கொரிய மொழியில் மொழிபெயர்க்க வேண்டும் என்ற கொரிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையிலும் கொரியாவில் தமிழர்களும் தமிழகத்தில் கொரியர்களும், வாழ்ந்து வருவதை கருதியும் பார் போற்றும் உலகப் பொதுமறையான திருக்குறளைக் கொரிய மொழியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மொழிபெயர்த்து வெளியிடப்படும். இதற்கென ரூ.36 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்படும்' எனஅறிவித்தார்.

ஜெயலலிதாவின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் திருக்குறள் கொரிய மொழியில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்டது. கொரிய மொழியில் மொழிபெயர்த்து அச்சிடப்பட்ட திருக்குறள் நூலை முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில் வெளியிட, இந்நூலின் முதற்படியைசென்னையில்உள்ள தென் கொரியத் தூதரகத்தின் தூதர் ஹங் டே கிம் பெற்றுக் கொண்டார். அப்போது ஹங் டே கிம் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது, சென்னையிலுள்ள தென் கொரிய தூதரகத்தின் துணைத் தூதர் டைசூ சங், தூதர் ஜூன்சூக் பார்க் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்