முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் ஜீஜீவாடி பகுதியிலிருந்து மோரனப்பள்ளி வரை 18.4 கீ.மீ தொலைவு வரை வெளிவட்ட சாலை அமைய உள்ள இடம்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 29 மே 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

 

தமிழக எல்லையான ஜுஜுவாடி பகுதியில், மறைந்த அம்மா சட்டபேரவையில் 110- விதியின் கீழ் அறிவிக்கப்பட்டதின்படி வெளிவட்ட சாலை அமைக்கப்படவுள்ள இடைத்தை தமிழக எல்லையான ஜுஜுவாடி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் கலெக்டர் சி.கதிரவன் இ.ஆ.ப. நேரில் பார்வையிட்டார்கள். ஜீஜீவாடி போக்குவரத்து சோதனை சாவடி அருகே வடக்கு வெளிவட்ட சாலை அமைக்கவுள்ள இடத்தில் சர்வே செய்து எல்லை வரையறை செய்து கற்கள் நடும் பணிகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார். மேலும் இது குறித்து சர்வே செய்த விவரங்களை பதிவுத்துறை அலுவலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த வெளி வட்ட சாலை 18.4 கீ.மீ தொலைவில் அமைக்கப்படவுள்ளது.

அமைச்சர் ஆய்வு

 

தொடர்ந்து ஓசூர் நகர் ராயக்கோட்டை மேம்பாலம் விக்டோரியா ஓட்டல் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைப்லைன் சேதடைந்துள்ளதை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மேற்கொண்டுவரும் பணிகளை பார்வையிட்ட கால்நடைத்துறை அமைச்சர் அருகில் உள்ள தொட்ட ஏரி பக்கவாட்டில் ஏரியின் கரையை பலப்படுத்தி மழைக்காலங்களில் வரும் மழைநீரை ஏரியில் செல்லும் வகையிலும், அந்த நீரை மதகுகள் அமைத்து தண்ணீர் சேகரம் செய்து பிரித்து விடும் வகையிலும் அமைக்க வேண்டும் என கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

ஒசூர் பேருந்து நிலையம் பாகலுர் பிரிவு சாலை அருகில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காளிகாம்பாள் அம்மன் கோவிலுக்கு சொந்த இடத்தில் உரிய அனுமதியோடு நகராட்சி மூலமாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தவும், பராமரிப்பு செய்யவும், ஓசூர் பேருந்து நிலையத்தில் நெருக்கடியை தவிர்க்கும் வகையில் துறை ரீதியாக அரசுக்கு கருத்து அனுப்பி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் சம்மந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

இவ்வாய்வின் போது ஓசூர் சார் கலெக்டர் ஜெ.யு. சந்திரகலா நெஞ்சாலைத் துறை கோட்டப்பொறியாளர் உத்தண்டி, உதவி இயக்குநர் செந்தில்குமரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியளர் பன்னீர் செல்வம், நகராட்சி பொறியாளர் குருசாமி, ஓசூர் வட்டாட்சியர் பூசன்குமார், செய்தி மக்கள்தொடர்பு அலுவலர் மு.சேகர், தருமபுரி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், மற்றும் ஜெயபிரகாஷ், மாதேவா, வி.டி.ஜெயராமன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து