எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Image Unavailable](/sites/all/themes/thinaboomi/images/photos/image-30.jpg)
Source: provided
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி விவசாயத்தில் சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் பயிர்களில் உற்பத்தியை அதிகரித்து மானாவாரி விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திடும் நோக்கத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கம் என்ற சிறப்புத் திட்டம் 2016-17-ம் ஆண்டு முதல் ரூ.12.0435 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தில் மானாவாரி நிலங்கள் தொகுப்பாக தேர்வு செய்யப்படுகிறது.
ஒரு தொகுப்பானது 1000 எக்டர் மானாவாரி சாகுபடி நிலப்பரப்பு உடையதாகும். இவற்றில் ஒன்று அல்லது இரண்டு கிராம பஞ்சாயத்துகள் தொகுப்பில் அடங்கும். முதலாண்டில் 15 தொகுப்புகளும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தலா 30 தொகுப்புகளிலும், ஆக மொத்தம் 75 தொகுப்புகளில், நிலப்பரப்பு மொத்தம் 1.875 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நடப்பாண்டில் 7 வட்டாரங்களில் 15 தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் தொகுப்பு மேம்பாட்டு குழுக்கள், வட்டார குழுக்கள் மற்றும் விவசாய குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. குழுக்களில் உள்ள விவசாயிகளுக்கு தேவையான விவரங்கள் சேகரித்து, முடிவுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேவையான மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் ஏற்படுத்துதல், மானாவாரி தொகுப்பிற்கு உகந்த பயிர் மேலாண்மை பணிகளை தொகுப்பு மேம்பாட்டுக்குழு வழிநடத்திச் செல்லும்.
வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பில் உழவு மானியம் நடப்பாண்டில் ஏக்கருக்கு ரூ.500 வீதம் 37500 ஏக்கருக்கு, உழவு மானியம் வழங்கப்படும். சிறுதானிய பயிர்கள் 26,390 ஏக்கரிலும், பயறு வகை 10855 ஏக்கரிலும், எண்ணெய்வித்துக்கள் 225 ஏக்கரிலும், சாகுபடி செய்யப்பட உள்ளது. விதைகள் மற்றும் உயிர் உரங்கள் 50 சதம் மானிய விலையில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படும். மானாவாரி தொகுப்பில் உற்பத்தி செய்யப்படும் விளை பொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறையின் வழகாட்டுதல்படி பயறு உடைக்கும் இயந்திரங்கள், செக்கு இயந்திரங்கள், சிறுதானியங்கள் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அரசு நிதி உதவியுடன் விவசாய குழுக்களுக்கு வழங்கப்படும். படித்து வேலைவாய்ப்பில்லாத கிராமப்புற இளைஞர்களை ஊக்குவிக்க இயந்திர வாடகை மையம் 80 சதம் மானியத்தில் அமைக்கலாம். கால்நடை பராமரிப்பிற்காக ஊட்டச்சத்து கலவை விநியோகம் மற்றும் பால் உற்பத்தி உயர்வு பணிகளுக்காக கால்நடை துறையின் வழிகாட்டுதல் மூலம் விவசாய குழு உறுப்பினர்களுக்கு அரசு நிதியில் இடுபொருட்கள் வழங்கப்படும்.
திறன் மேம்பாட்டு பயிற்சி : மானாவாரி வேளாண்மையில் தொழில்நுட்ப பயிற்சி முக்கியமானது. மாவட்ட அளவில் முதன்மை பயிற்சியாளர்கள் ஒவ்வொரு மானாவாரி தொகுப்பிலிருந்தும் ஐந்து அலுவலர்கள் வீதம் 75 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இதில் வேளாண்மை, வேளாண் பொறியியல், கால்நடை பராமரிப்பு, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், கூட்டுறவு மற்றும் வேளாண் பல்கலை கழக ஆராய்ச்சி நிலைய அறிஞர்கள் மூலம் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதனைத் தொடர்ந்து இந்த பயிற்சி வட்டார அளவிலும், பின்னர், கிராம அளவிலும் திட்ட செயலாக்கக்குழு விவசாய உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய வேளாண்மை இணை இயக்குநர் - 9597251659, வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் வேப்பனப்பள்ளி-9443207504, மத்தூர்-9787508300, ஊத்தங்கரை-9486755252, சூளகிரி-9444685112, ஓசூர்-97508215656, கெலமங்கலம் மற்றும் தளி-9442630246, மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம்.
இத்திட்டத்தில் ஏறத்தாழ 16000 சிறுவிவசாயிகள், குறு விவசாயிகள், மகளிர், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெரிய விவசாயிகள் பயன்பெற உள்ளனர். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மானாவாரி கிராம விவசாயிகள், மழைநீரை நன்கு பயன்படுத்தி, நவீன வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்றி அதிக மகசூல், கூடுதல் வருமானம் பெற அனைத்து விவசாயிகளும் பங்குபெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
காசாவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
05 Feb 2025வாஷிங்டன் : காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
பறவையினங்களை வேட்டையாடியதாக அதிபர் டிரம்ப் மகன் மீது இத்தாலியில் வழக்குப்பதிவு
05 Feb 2025வெனிஸ் : இத்தாலியில் பாதுகாக்கப்பட்ட பறவையினங்களை வேட்டையாடிதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மகன் டிரம்ப் ஜூனியர் மீது இத்தாலி அரசில் வழக்குப்பதிவு செய்யப்பட
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
கிருஷ்ணகிரி அருகே சிறுமிக்கு 3 ஆசிரியர்கள் வன்கொடுமை: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி
05 Feb 2025சென்னை : பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாட்டைத் தள்ளியதற்கு திமுக அரசு தலைகுனிய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.