எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை வானொலியில் "சான்றோர் சிந்தனை" எனும் நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் கே.பி.முத்துசாமி ஆற்றிய உரையை இங்கே காண்போம்.
இறைவன் இவ்வுலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களும் உய்வு பெறுவதற்காக உயிரை வழங்குகிறான். வினைகளை நீக்கிடப் பிறவிப் பேற்றினை அருளுகிறான். தாயும், தந்தையும் இணையும்போது இறைவனுடைய திருவுள்ளப்படி கரு உருவாகிறது. அந்தக் கரு உயிருடன் கருப்பையில் பலத்த பாதுகாப்புடன் உடம்பினைப் பெற்று குழந்தையாகப் பிறந்து இந்த உலகிற்கு வருகிறது.
இதை மணிவாசகர் போற்றித் திரு அகவலில் சிறப்பாக விளக்குகிறார். அருவ நிலையில் தேவர்களாலும் காண முடியாத திருவடிகளை உயிர்கள் கண்டு வாழ்த்த எளிதாகும்படி சிவப்பரம்பொருள் உருவம் தாங்கி வருகிறார். இறைவனை வணங்கி மகிழப் பக்குவமாக வேண்டிய ஜீவர்கள் கடல் சூழ்ந்த இவ்வுலகில் அவரவர்கள் செய்தவினைகளுக்கு ஏற்ப யானை முதல் எறும்பு வரையுள்ள பல வடிவங்களில் பிறக்கின்றன. பிறகு மனிதப் பிறப்பு எடுக்கும்போது அந்தக் கருவானது கருப்பையில் உள்ள பல கிருமிகளின் தாக்குதலில் இருந்து மீண்டு பிழைத்து வளருகிறது.
ஒருமாதம் பூர்த்தியானதும் தனக்காக என ஒரு வடிவெடுக்கிறது. இரண்டு மாதம் நிறையும் பொழுது வலுப்பெறுகிறது. மூன்றாம் மாதத்தில் தாயின் கருவில் பெருகும் கொழுப்பு நீரில் புதையுண்டு போகாமல் உயிர் வாழ்கிறது. ஐந்தாவது மாதத்தில் கருக் கலைந்து விடாமல் பாதுகாப்பாக இருக்கிறது. ஆறாவது மாதத்தில் அந்தக் கருவுக்கு எல்லா அவயங்களும் முறையாக அமைகிறது. ஏழு, எட்டு, ஒன்பதாம் மாதத்தில் இயல்பாக ஏற்படும் பல துன்பங்களைக் கடந்து உயிருடன் இருக்கிறது.
பத்தாவது மாதத்தில் தகுதியுடன் கர்ப்பத்தில் வளர்ந்து, பிறக்கும்போது பிரசவ வேதனையில் தாயும் குழந்தையும் துன்பப்பட்டு குழந்தை பிறக்கிறது. கருப்பையில் வளரும் கருவுக்கு இறைவன் அதன் தொப்புள் கொடி மூலமாகத் தாயிடமிருந்து உணவு பெற்று வளரச் செய்கிறான். கருவிலுள்ள குழந்தை தன் இருகரம் கூப்பி இறைவனையே துதித்துக் கொண்டிருக்கிறது. பத்தாவது மாதம் சூதக வாயு அந்தக் குழந்தையை தாயின் வயிற்றிலிருந்து இந்தப் பூவுலகத்தில் வந்து பிறக்குமாறு வெளியேற்றுகிறது. கருப்பையிலிருந்து வெளியே வந்தவுடன் "பிராணன் " என்ற வாயு சுவாசத்தை மேற்கொள்ளச் செய்கிறது. "அபானன்" என்ற வாயு அந்தக் குழந்தையின் வயிற்றிலிருந்து மலசலங்களை வெளியேற்றுகிறது. இதையே "காட்டு மலம்" என்பார்கள். உடனே அந்தக் குழந்தைக்குப் பசி ஏற்பட்டு "குவா ! குவா" என்று அழ ஆரம்பித்தவுடன் அந்தக் குழந்தையின் உடல் உறுப்புகள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றன. பிறந்த குழந்தையின் அழுகை அதன் தாய்க்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
நற்றமிழ் வல்ல நாவுக்கரசர் கருவறையில் இருந்தபோதே இறை உணர்வுடையவராகத் திகழ்ந்தார். கருவின் உருவமற்ற நிலையிலும் எண்ணிய எண்ணமெல்லாம் இறைவனுடைய திருவடிகளே என்கிறார். உருவமும் பருவமும் அடையும் முன்பே கடவுளையே எப்போதும் நீக்கமற நினைத்தாராம் உருவு கொண்டு இவ்வுலகில் தோன்றிய போதும் இறைவனுடைய புகழைப் பல காலம் பயின்று வந்தார். அதுமட்டுமல்ல இறைவனை மறவாமல் இருக்க புறக்கோலத்திலும் "சிவாய நம" என்று திரு நீற்றினை அணிந்து வந்தார். என்னுடைய பிறவி நீங்க இறைவா தங்களையே அடைக்கலமாக நினைத்து இருக்கும் எனக்கு சிவகதி அருள வேண்டும் என்று விண்ணப்பிக்கிறார்.
மேலும் தாயின் கருவில் இருந்த காலத்தில் இருந்தே உன் திருவடியை என் மனம் சிந்தித்து வருகிறது. பிறவிக்கடலில் சிக்கித் தவிக்கும் எனக்கு உன்னை விட்டால் வேறு கதி இல்லை. என் மீது இரக்கம் கொண்டு அருள் பாலிக்க வேண்டும் இறைவா! என்று வேண்டுகிறார். "கருவுற்ற நாள் முதலாக உன்பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்தழிந்து எய்த் தொழிந்தேன்" என்கிறார்.
இந்த உடம்பை அருமையிலும் அருமையாக ஆக்கித் தந்து, இந்த உடம்புக்குள் எத்தனை எத்தனை வகையான நுண்ணிய கருவிகளையும் படைத்து, நம்மை வாழவைக்கும் இறைவனின் பெருங்கருணையை நினைந்து, நினைந்து, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைந்து நனைந்து, அருளமுதே! நன்னிதியே! ஞான நடத்தரசே! என்னுரிமை நாயகனே என்று இறைவனைப் போற்றி வணங்கி வந்தால் இறைவன் நமக்கு சிவகதி என்னும் பெரும் பேற்றினை அருள்வான்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்4 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்4 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.5 months 1 week ago |
-
தமிழ்நாடு பட்ஜெட்டில் பல புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
05 Feb 2025சென்னை: 2025-26-ம் ஆண்டுக்கான தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது
-
அதிபர் டிரம்பின் புதிய உத்தரவால் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்த ஈரான் கரன்சி மதிப்பு
05 Feb 2025தெஹ்ரான் : அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-02-2025.
05 Feb 2025 -
ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்தது: தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
05 Feb 2025சென்னை: சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சம் தொட்டு ஒரு சவரன் ரூ.63 ஆயிரத்தை கடந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் இயல்பைவிட வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2026 தி.மு.க. வெற்றிக்கான முன்னோட்டம் வாக்கு செலுத்திய பிறகு சந்திரகுமார் பேட்டி
05 Feb 2025ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என தி.மு.க. வேட்பாளர் சந்திரகுமார் கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை : ஓ.பன்னீர் செல்வம் கண்டனம்
05 Feb 2025சென்னை : பத்திரப்பதிவு குறித்த அறிவிப்பை முன்னரே அரசு அறிவிக்கவில்லை என்று தெரிவித்துள்ள ஒ.பன்னீர் செல்வம் தி.மு.க.
-
ஊதிய ஓப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, பிப்.
-
விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் பலி
05 Feb 2025விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
-
டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்கள் பெறும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் அமல்: ஐகோர்ட்டில் அரசு தகவல்
05 Feb 2025சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை பெறும் திட்டம் வருகிற ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன
-
3 பணியாளர்கள் தற்காலிக நீக்கம்: சாம்சங் தொழிற்சாலையில் உள்ளியிருப்பு போராட்டம்
05 Feb 2025காஞ்சிபுரம் : சாம்சங் தொழிலாளர்கள் 3 பேரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்ததால் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு நிலவியது
-
ஐ.சி.சி. டி-20 தரவரிசை: அபிஷேக் சர்மா முன்னேற்றம்
05 Feb 2025துபாய் : ஐசிசி ஆடவர் டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடம் பிடித்துள்ளார் இந்திய இளம் வீரர் அபிஷேக் சர்மா.
-
இதுவரை இல்லாத வகையில் தமிழ்நாட்டில் 10.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் அதிகரிப்பு
05 Feb 2025சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் 10 .41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.
-
ஏ.ஐ. செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
05 Feb 2025டெல்லி : அலுவலக மின்னணு சாதனங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப செயலிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
-
உ.பி. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் மோடி
05 Feb 2025லக்னோ: உ.பி. மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி புனித நீராடினார்.
-
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-இங்கி. அணிகள் நாக்பூரில் இன்று மோதல்
05 Feb 2025நாக்பூர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் நடக்கிறது.
சுற்றுப்பயணம்...
-
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்
05 Feb 2025அமிர்தசரஸ் : சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கையாக அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட 104 இந்தியர்கள் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தனர்.
-
'விடாமுயற்சி’ சிறப்புக்காட்சிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி
05 Feb 2025சென்னை : அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வாழப்பாடி ராமமூர்த்திக்கு மணிமண்டபம்: முதல்வருக்கு ஐ.என்.டி.யூ.சி. வலியுறுத்தல்
05 Feb 2025சென்னை, முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி இராமமூர்த்திக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு ஐ.என்.டி.யு.சி கோரிக்கை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள்
-
ஊதிய பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் 26-ம் தேதி வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
05 Feb 2025சென்னை, வருகிற 10-ம் தேதிக்குள் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை தொடங்காவிட்டால் வருகிற 26-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அண்ணா தொழிற்சங்கம்&n
-
காசாவை கைப்பற்ற போவதாக அமெரிக்கா அதிபர் அறிவிப்பு
05 Feb 2025வாஷிங்டன் : காசாவை கைப்பற்றி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம் - டிரம்ப் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
எச்-1பி, எல்-1 விசா வைத்திருக்கும் அமெரிக்க இந்தியர்களுக்கு சிக்கல்
05 Feb 2025அமெரிக்கா : எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர
-
நகரம், ஒன்றியம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகள்: த.வெ.க. மாவட்ட செயலாளர்களுக்கு கட்சி தலைவர் விஜய் முக்கிய உத்தரவு
05 Feb 2025சென்னை : தமிழக வெற்றிக்கழக மாவட்ட செயலாளர்களுக்கு நகரம், ஒன்றியம், பகுதி, வட்டம் உள்ளிட்ட பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்ய கட்சி தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.&nb
-
வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலாப்பயணி பலி
05 Feb 2025கோவை: வால்பாறையில் யானை தாக்கி ஜெர்மனி சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.