முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்முகாநதி நீர்த்தேக்கத்திலிருந்து புன் செய் நிலங்களுக்கான தண்ணீரை கலெக்டர் வெங்கடாசலம், திறந்து வைத்தார்:-

புதன்கிழமை, 3 ஜனவரி 2018      தேனி
Image Unavailable

      தேனி.- தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட இராயப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சண்முகாநதி நீர்தேக்கத்திலிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, புன்செய் நிலங்களுக்கான தண்ணீரை  மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், திறந்து வைத்தார்.
 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழக அரசு சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து வந்த கோரிக்கையினை ஏற்று 03.01.2018 முதல் நாள் ஒன்றுக்கு 14.47 கன அடி வீதம் 94 நாட்களுக்கு நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது.
 அதனடிப்படையில், சண்முகாநதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளைம் வட்டத்திற்குட்பட்ட இராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்னஓவுலாபுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி ஆகிய கிராமங்களை சுற்றிலுள்ள 1640 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் இன்று (03.01.2018) முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, வேளாண்குடி பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
 இந்நிகழ்வின் போது, வருவாய் கோட்டாட்சியர் (உத்தமபாளையம்) திரு.சென்னியப்பன்  பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உதவி செயற்பொறியாளர் திரு.அன்புசெல்வம்  உதவிப்பொறியாளர்கள் திரு.கதிரேஸ்குமார்  திரு.ராஜேஷ்வரன்  திரு.பிரேம்ராஜ்குமார்  வட்டாட்சியர் திரு.ஜவஹர்லால் பாண்டியன் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து