முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை காமராசர் பல்கலையில் தானியங்கி நூலகம்

செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

 மதுரை, -தென்னிந்தியவில் முதல் முறையாக முற்றிலும் கனிணிமையமாக்கப்பட்ட தானியங்கி நூலகத்தை துணைவேந்தர் முனைவர் பி.பி.செல்லத்துரை  துவக்கி வைத்தார்.
 மாணவ,மாணவியர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துகொண்டு தானியங்கி இயந்திரத்தில்  அடையாள அட்டையை ஸ்கேன் செய்தவுடன் சுமார் இரண்டு மூன்று விநாடிகளில் புத்தகத்தின் பதிவு எண், தலைப்பு மற்றும் ஆசிரியரின்பெயர் போன்றவற்றை தானகவே பதிவுசெய்துகொள்ளும். மேலும் மாணவர்களுக்கு புத்தகவிபரம் மற்றும் திரும்ப செலுத்தும் விபரம் அடங்கிய குறுச்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் புத்தகத்தை திரும்பப்பெறுவதற்கு தானியங்கி அலமாரி செயல்படுகிறது. ஒரே நேரத்தில் பல புத்தகங்களைத் திரும்பப்பெறும் வசதியையும் கொண்டது. புத்தகத்தை திரும்பப்பெற்றபின் மாணவர்களுக்கு புத்தகத்தை பெற்றுக்கொண்டதிற்கான ரசீது வழங்கும்  வசதியையும்கொண்டது.
இவ்வகை இயந்திரங்களினால் நூலகத்தின் நூல் வழங்கும் பிரிவில் மாணவ மாணவியர் காத்திருக்க தேவையில்லை. மேலும் நூலகத்தின் சேவை மிகவும் நேர்த்தியாக நடைபெறும்.
மாணவ,மாணவிகளின் புத்தகத் தேவைகளை தொடுதிரையின் மூலமாக நூலின் ஆசிரியர்பெயர் அல்லது புத்தகதலைப்பை தட்டச்சுசெய்து புத்தகங்களின் இருப்பு நிலைகளை தெரிந்து கொள்ளும் வசதி, பல்கலைக்கழக நூலகத்தினுள் மாணவர்களின் வசதிகேற்ப மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது
இந்த நிகழ்சியில் பதிவாளர் முனைவர் வி.சின்னையா,  ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக நூலகர் முனைவர் பா.சுரேஷ் செய்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து