முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முபாரக் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      உலகம்
Image Unavailable

 

கெய்ரோ, டிச. 30 - எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மீதான கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கியது. 83 வயதாகும் ஹோஸ்னி முபாரக் இப்போது கெய்ரோவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் எகிப்தில் நடந்த வன்முறையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட வழக்கு இவர் மீது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் 850 பேர் உயிரிழந்தனர். இது தவிர, இவர் மீது ஊழல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த போது இதை விசாரிக்கும் நீதிபதி அகமது ரபாத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கையை கடந்த டிசம்பர் 7 ம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது. பொதுமக்களுக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைய காரணமாக இருந்தார் என்ற காரணத்திற்காக முபாரக்கிற்கு தூக்கு தண்டனை அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

ராணுவ ஆட்சி மீதான மக்கள் அதிருப்தியை திசை திருப்புவதற்காக நீண்ட நாள் பதவியில் இருந்த முபாரக் பதவி விலகி தேர்தல் நடத்துவதாக அறிவித்தார். இருப்பினும் தேர்தலுக்கு பிறகு புரட்சி வெடித்தது. அதில் இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்று திரண்டு முபாரக்கை பதவியில் இருந்து தூக்கியெறிந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்