முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொகாரோ மின் நிலைய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு சீல்

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      இந்தியா
Image Unavailable

பொகாரோ, ஜன.12 - பொகாரோ மின்சார நிலையத்தில் பணியாற்றி வரும் 3 முக்கிய அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு சி.பி.ஐ. சீல் வைத்துள்ளது. தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேசனுக்கு சொந்தமான பொகாரோ மின் நிலையத்தில் பணியாற்றிவரும் 3 முக்கிய அதிகாரிகள் மீது ஊழல் புகார்கள் வந்துள்ளன. மேற்பார்வை பொறியாளர் டி.டி.சாகு, நிர்வாக பொறியாளர்கள் ருத்ராசென், ராஜீவ் ரஞ்சன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. இதையடுத்து இந்த 3 அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் 20 சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் கைப்பற்றினர். பிறகு இவர்கள் மூவரின் அலுவலகங்களையும் பூட்டி சி.பி.ஐ. அதிகாரிகள் சீல் வைத்தனர். பிறகு மேற்பார்வை பொறியாளர் சாகுவை அழைத்துக்கொண்டு அவரது வங்கிக்குச் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்களை சோதனையிட்டனர். அதன் பிறகு அவரது வங்கிக் கணக்குகளை சி.பி.ஐ. அதிகாரிகள் முடக்கினர். லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இந்த 3 அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து கோர்டின் அனுமதியோடு சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சி.பி.ஐ. எஸ்.பி. (தன்பாத்) பிரமோத்குமார் மஜ்கி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்