முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சீயன் லூங் உடன் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில் முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது.

5 நாள் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு 5 நாள் பயணமாக கடந்த மாதம் 29-ம் தேதி புறப்பட்டார். முதலில் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பினரிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆனது.

கருத்தரங்கில்...
அதை தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூர் புறப்பட்டார். அங்கு செல்லும் வழியில் மலேசியாவில் சிறிது நேரம் அவர் ஓய்வு எடுத்தார். அவரை மலேசிய துணை பிரதமர் டாக்டர் வான் அஜிஜா வரவேற்றார். பின்னர்  மலேசிய பிரதமர் மகாதீர் முகமதுவை, மோடி சந்தித்தார். இதையடுத்து பிரதமர் மோடி சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உடன் வர்த்தக கருத்தரங்கில் கலந்துகொண்டார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி கலந்து கொண்டார்.

மதிய விருது...
பிரதமர் மோடி வியாழக்கிழமையே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனினும் அவருக்கு அரசு முறை வரவேற்பு நேற்றுதான் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டு பிரதமர்  லீ சீயன் லூங் -ஐ பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இஸ்தானா மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  சந்திப்பின் போது இரு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கு மதிய விருந்தை அந்நாட்டு பிரதமர் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து