முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாஸ்திரி பாலியல் புகார் பதவி விலகினார் பிஷப் பிராங்கோ

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்,கேரள கன்னியாஸ்திரியை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்தததாக குற்றம் சாட்டப்பட்ட ஜலந்தர் பிஷப் பிராங்கோ மூலக்கல் பதவி விலகியுள்ளார்.

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தேவாலய பேராயர் பிராங்கோ மூலக்கல் மீது கோட்டயம் அருகே குருவிளங்காடு பகுதியில் உள்ள தேவாலயத்தில் கன்னியாஸ்திரியாக இருந்தவர் பாலியல் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் பேராயர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்தின்போது பிராங்கோ பாதிரியாராக இருந்துள்ளார்.

கன்னியாஸ்திரியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டரை மாதங்கள் கடந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் டெல்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்தியப் பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு கன்னியாஸ்திரி கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து கன்னியாஸ்திரியின் புகார் வெளிச்சத்துக்கு வந்தது. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி தங்கிய விடுதியில் இருந்த மற்ற கன்னியாஸ்திரிகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிஷப் பிராங்கோ பதவி விலகியுள்ளார். அவர் விரைவில் விசாரணைக்காக கேரளா செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து