முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018ம் ஆண்டு வேதியல் நோபல் பரிசு: 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது

புதன்கிழமை, 3 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் : 2018-ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

மருத்துவத்துக்கு...

மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு  அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு  அறிவிக்கப்பட்டது

இயற்பியலுக்கான...

நேற்று முன்தினம் இயற்பியலுக்கான நோபல்  3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஆர்தர் அஷ்கின், பிரான்சை சேர்ந்த  ஜிரார்டு மவ்ரு , மற்றும் கனடாவைச் சேர்ந்த டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட். ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு லேசர் இயற்பியல் துறையில் முன்மாதிரி கண்டுபிடிப்புகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

வேதியலுக்கான...

நேற்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 2018ம் ஆண்டில் வேதியலுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜார்ஜ் ஸ்மித், பிரான்சஸ் அர்னால்டு, பிரிட்டனின் கிரிகோரி விண்ட்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து