முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கத்தாரில் ஒரே நாளில் கொட்டித் தீர்த்த கனமழை பல்வேறு நகரங்களை சூழ்ந்த வெள்ளம்

திங்கட்கிழமை, 22 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

தோஹா,கத்தாரில் ஓராண்டு பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததால் தலைநகர் தோஹா உள்ளிட்ட பல்வேறு நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது.

பாலைவன நாடான கத்தாரில் நேற்று முன்தினம் திடீரென்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. தொடர்ச்சியாக கனமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் தேங்கியது, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது, விமானப் போக்குவரத்தும்கூட பாதிக்கப்பட்டது.கத்தார் மக்கள் இதுபோன்ற மழையை இதற்கு முன் பார்த்தது இல்லை, திடீரென பெய்த மழை இந்த அளவுக்குப் பெருமழையாக ஒரே நாளில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
தலைநகர் தோஹாவில் பெரும்பாலான சாலைகளில் வெள்ள நீர் ஆறாகப் பாய்ந்தது. இதனால், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகளுக்குள் நீர் புகுந்தது. தோஹாவில் பெய்த கனமழையால் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட பல்வேறு பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள் அண்டை நாடான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சில விமானங்கள் குவைத் நாட்டுக்கும், ஈரான் நாட்டுக்கும் திருப்பி அனுப்பி விடப்பட்டு காலநிலை குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், தோஹாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், சுரங்கப்பாதைகள், தாழ்வான சாலைகளில் கார்களைக் கொண்டு செல்ல வேண்டாம் என்று கத்தார் பொதுப்பணித்துறை மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் தோஹா நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியதையும், கார்கள் தண்ணீரில் மிதப்பதையும், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததையும் காண முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து