முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

நன்றி உணர்வு

பிரேசில் நாட்டை சேர்ந்த பிகுயிரோடோ, செரினோ என்ற குதிரையை வளர்த்து வந்தார். திடீரென விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கின்போது அங்கு வந்த குதிரை செரினோ உரிமையாளர் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுதது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நம்மீது பிரியம்

 விலங்குகளைப் போன்ற தடிமனான ரோமங்கள் மனிதர்களுக்கு கிடையாது. இதனால்தான், அவைகள் நம்மை கடிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மனிதர்களுக்கு நோயின் அச்சுறுத்தலைக் கூட்டுவது பெண் கொசுக்கள் தான் என்றும்,ஆண் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

புதிய வசதி

ஜிஃப் - கிராஃபிக் இன்டர்சேஞ்ச் ஃபார்மேட்,  ஜூன் 15, 1987-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மென்பொறியாளரான ஸ்டீவ் வில்வைட் என்பவர் கண்டறிந்த ஜிஃப்களின் 31-வது பிறந்த தினத்தை பேஸ்புக் கொண்டாடுகிறது. அந்த வகையில் பேஸ்புக் கமெண்ட்களில் ஜிஃப்களை பயன்படுத்தும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 1300 கோடி ஜிஃப்கள் மெசன்ஜர் மூலம் அனுப்பப்பட்டதாம்.

இனி தண்ணீரை குடிக்க வேண்டாம் - அப்படியே மென்று சாப்பிடலாம்

எதிர்காலத்தில் நாடுகளுக்கு இடையே நல்ல தண்ணீரை பகிர்ந்து கொள்வதில்தான் மிகப்பெரிய சவால்கள் அடங்கியுள்ளதாக அடிக்கடி சூழலியலாளர்கள் எச்சரித்து வருகின்றனர். தற்போது பிளாஸ்டிக் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரால் நமக்கு பயன் என்றாலும் பாவம் பூமி பந்து படாத பாடு படுகிறது. தற்போது அதற்கு முடிவு கட்ட வந்து விட்டது Ooho water.  லண்டனை மையமாக வைத்து இயங்கி வரும் ஸ்கிப்பிங் ராக்ஸ் லேப் என்ற ஆய்வகம் கடற்பாசி மற்றும் தாவரங்களை பயன்படுத்தி திட வடிவிலான தண்ணீரை கண்டுபிடித்துள்ளது. இதனால் தண்ணீரை பாட்டிலில் அடைக்க வேண்டிய தேவை இருக்காது. மேலும் தாகம் எடுக்கும் போது இதை அப்படியே எடுத்து மெல்ல வேண்டியதுதான். பார்ப்பதற்கு நிறமற்ற நம்மூர் ஜவ்வுமிட்டாய் போல காணப்படும் இந்த Ooho வாட்டர் வாயில் போட்டதும் அப்படியே கல்கண்டாய் கரைந்து விடுகிறது. இயற்கையான முறைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.

முகம் பார்க்கும் கண்ணாடி முதன்முதலில் எப்போது தோன்றியது?

1835 இல். ஜெர்மனியைச் சேர்ந்த வேதியிலாளர் ஜஸ்டுஸ் வோன் லைபிக் என்பவர்தான் கண்ணாடியின் பின்புறம் சில ரசாயன கலவையை பூசுவதன் மூலம் அசலான முகம் பார்க்கும் கண்ணாடியை உருவாக்கியவர். இவர்தான் அமோனியாவில் சில்வர் நைட்ரேட்டை கலந்து கண்ணாடியின் பின்புறம் பூசி அதன் எதிரொளிப்பு தன்மையை உலகுக்கு காட்டியவர். அப்போது முதல் நாம் நமது முகங்களை இடைவிடாமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம்

உலகின்  முதல் முழு நீள அனிமேஷன் சினிமா எங்கு தயாரிக்கப்பட்டது தெரியுமா.. நாம் அனைவரும் யூகிப்பது போல அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட்டிலோ.. இங்கிலாந்திலோ அல்ல. மாறாக உலகின் முதல் முழு நீள அனிமேஷன் திரைப்படம் அர்ஜென்டினாவில் தயாரிக்கப்பட்டது.  El Apóstol  என்று பெயரிடப்பட்ட அரசியல் நகைச்சுவை படமாக இந்த படம் 1917 இல் தயாரிக்கப்பட்டது. 70 நிமிடங்கள் கொண்ட அப்படத்தை  Quirino Cristiani என்ற இத்தாலியர் அப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், பெரும்பாலும் 1937 இல் வால்ட் டிஸ்னியால் எடுக்கப்பட்ட Snow White and the Seven Dwarfs என்ற படத்தையே முதன்முதலாக எடுக்கப்பட்ட முழு நீள அனிமேஷன் படம் என பெரும்பாலானோர் கருதிக் கொண்டிருக்கின்றனர். மேலும் அந்த அர்ஜென்டினா படம் கின்னஸிலும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 8 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 10 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 10 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 8 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 8 hours ago