முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி மருத்துவர்கள் சாதனை

நியூயார்க்கில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட பன்றியில் வளர்க்கப்பட்ட சிறுநீரகத்தை ஒரு மனித நோயாளிக்கு வெற்றிகரமாகப் பொருத்தி, அதை முழுமையான ஆற்றலுடன் இயங்கக்கூடிய வகையில் இணைத்து சாதனை படைத்துள்ளனர். பன்றியின் உடலில் வளர்க்கப்பட்ட சிறுநீரகம் இப்போது மனித உடலில் சாதாரணமாக வேலை செய்வதைக் கண்டறிந்துள்ளனர். உறுப்புகளில் கோளாறு ஏற்பட்டு, நோய்வாய்ப்படும் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முயற்சிதான் உடல் உறுப்பு மாற்றம் செய்யும் முறை. இது இப்போது வேறொரு முக்கியமான கட்டத்திற்கு நகர்ந்துவிட்டது, உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கையை காட்டிலும், உறுப்பு மாற்றம் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த பற்றாக்குறை காரணமாகப் பலரும் உயிர் இழக்கின்றனர். இதற்கான தீர்வாக மரபணு மாற்ற முறைப்படி பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட உடல் உறுப்புகளை மனிதர்களுக்குப் பொருத்திப் பயன்படுத்தலாம் என்ற முயற்சி முன்வைக்கப்பட்டது. அதன்படி, மூளைச்சாவு அடைந்த ஒரு மனிதரின் குடும்பத்தின் ஒப்புதலுடன், மருத்துவர்கள் பன்றியின் சிறுநீரகத்தை நோயாளிக்கு இணைத்து, அவரை வென்டிலேட்டரில் உயிருடன் வைத்து அசாதாரணமான சோதனையை மேற்கொண்டனர். அறுவைசிகிச்சைக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டின் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது அது எதிர்பார்த்ததை விட இயல்பாக செயல்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுளை கூட்ட

நாம் தினமும் விரும்பிச் செய்யும் உடற்பயிற்சியை செய்வதற்கு முன்பும், செய்த பின்னும் ஸ்டிரெச்சிங் பயிற்சிசெய்வது மிகவும் முக்கியமானது. இதை தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் செய்வதால், உடல் ரப்பர் போல வளைந்து கொடுத்து புத்துணர்ச்சி அடையச் செய்து, நம் ஆயுளையும் 10 ஆண்டுகள் ஆரோக்கியத்தோடு கூட்டுகிறதாம்.

புதிய வசதி

ஆண்ட்ராய்ட், ஐபோன்களில் வாட்ஸ் அப் உபயோகப்படுத்துபவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை அவர்களின் நண்பர்கள் தெரிந்து கொள்ளும் புதிய வசதி, நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், வாட்ஸ் அப் கால் பேசிகொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியபடுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது.

மாம்பழ பேக்

மாம்பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்டுகள் சருமம் சுருக்கம் அடைவதை தடுக்கும். முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். மாம்பழ சதைப் பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். பின் உங்கள் முகம் ஜொலிக்கும்.  மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசினால் முகப்பரு போகும்.

சார்ஜ் நீடிக்க ...

வைபரேட் மோடினை கட் செய்வது, ஸ்மார்ட்போன் கீபேடில் டைப் செய்யும்போது சத்தம் கொடுக்கும் ஹேப்டிக் ஃபீட்பேக் எனும் ஆப்ஷனையும் ஆஃபில் வைப்புது மற்றும் நாம் இன்ஸ்டால் செய்துள்ள பெரும்பாலான செயலிகள் நமது இருப்பிடத்தை லொகேஷன் டிராக்கிங் மூலமாக டிராக் செய்து கொண்டே இருக்கும். லொகேஷன் டிராக்கிங் சிஸ்டம் பேட்டரி சார்ஜை விரைவில் குறைக்கும் அதை ஆஃப் செய்து வைப்பது சிறப்பு.

ஸ்மார்ட் பல்பு

சி.சிடிவி கேமராக்களின் விலை சற்று அதிகமாய் உள்ளதால் அனைவராலும் அதனை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. தற்போது சி.சிடிவி கேமராவிற்கு நிகரான ஸ்மார்ட் பல்பு இந்தியச் சந்தையில் பிரபலமடைந்து வருகிறது. இந்த புதிய ஸ்மார்ட் பல்பில் 360 டிகிரி எச்.டி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட் பல்பில் வைஃபை, ஆடியோ ஸ்பீக்கர், மைக், மோஷன் டிடெக்டர், ஐ.ஆர் கட், 128 ஜிபி வரையிலான மெமரி கார்டு வசதி மற்றும் ஆர்.ஜி.பி நிறத்தை மாற்றும் சேவை எனப் பல சேவைகளை பட்ஜெட் விலையில் கிடைக்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. விலையும் மிகவும் குறைவுதான். ஆன் லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. பிறகென்ன வீட்டில் எங்கு தேவையோ வாங்கி மாட்டுங்கள்.. இனி திருடன் உங்களிடம் வாலாட்ட முடியாது..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 hours ago