முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

KFC Style 50 Whole Chicken

Cooking time in minutes: 
30
Ingredients: 

 KFC Style 50 Whole Chicken செய்யத் தேவையான பொருள்கள்;

 

  1. முழு கோழிகள் – 50.
  2. முட்டை- 150.
  3. பால் – 10 லிட்டர்.
  4. எலுமிச்சை பழம் – 100.
  5. ரீபைண்ட் ஆயில்  - 20 லிட்டர்.
  6. மிளகாய் வத்தல் - 2 கிலோ.
  7. ஏலக்காய்250 கிராம். 
  8. பொடி செய்த மிளகு தூள்  - 500 கிராம்.
  9. இஞ்சி பூண்டு விழுது - 3 கிலோ.
  10. கான்பிளவர் மாவு - 5 கிலோ.
  11. தனியா தூள்  - 1. கிலோ.
  12. மிளகாய் தூள்- 2 கிலோ.
  13. பேக்கிங் சோடா -250 கிராம்
  14. உப்பு -  தேவையான அளவு .

 

 

Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 1 லிட்டர் ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் 2 கிலோ மிளகாய் வத்தலை போட்டு நன்றாக வறுத்து அம்மியில் சிறிது சிறிதாக போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து  எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. 100 எலுமிச்சம் பழதை பாதியாக அறுத்து பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. 150 முட்டைகளை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து 10 லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்கவைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  5. 250 கிராம் ஏலக்காய்யை எடுத்து சிறிய உரலில் போட்டு நன்றாக இடித்து தூள் செய்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  6. உப்பு மற்றும் மசாலாக்கலவை கோழியின் உள்புறம் இறங்க கோழிகளை எடுத்து 5 இடங்களில் கத்தியால் கீறி விடவும்.
  7. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 50 முழு கோழிகளை போட்டு,தயார் செய்து வைத்துள்ள 10 லிட்டர் பாலை ஊற்றவும்.
  8. 100 எலுமிச்சம் பழச்சாரையும் 150 முட்டைகலவையையும் ஊற்றவும்,
  9. அம்மியில் அரைத்து வைத்துள்ள 2 கிலோ மிளகாய் விழுதை போடவும்.
  10. மிளகுத்தூள்,ஏலக்காய் பொடி இஞ்சி பூண்டு விழுது மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  11. ஒரு பாத்திரத்தில் 5 கிலோ கான்பிளவர் மாவு,இஞ்சி பூண்டு விழுது  2 கிலோ, தனியா தூள் 1 கிலோ, மிளகாய் தூள் 2 கிலோ,பேக்கிங் சோடா 250 கிராம்,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து வைத்துக்கொள்ளவும்.
  12.  ஊற வைத்த கோழியை தயார் செய்து வைத்துள்ள மாவு கலவையில் ஒவ்வொன்றாக போட்டு மாவு கலவை கோழியின் அணைத்து பகுதிகளிலும் படும்படி புரட்டி எடுக்கவும், இதே போல் அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  13. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட்  ஆயில் 5 லிட்டர் ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் மாவு கலவையில் முக்கி எடுத்த கோழியை  ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு குறைவான தணலில் வறுக்கவும்.
  14. திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும்,நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்,இதேபோல் மீதமுள்ள கோழிகளையும் வறுத்து எடுக்கவும்,
  15. சுவையான  KFC Style 50 Whole Chicken ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 8 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 10 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 10 months 3 weeks ago