முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேகங்களை கண்காணிக்க நாசா வேண்டுகோள்

புதன்கிழமை, 14 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், பொது மக்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களைபயன்படுத்தி மேகங்களை கண்காணிக்க குடிமகன் விஞ்ஞானிகள் என்ற திட்டத்தின் மூலம் நாசா அழைப்பு விடுத்து உள்ளது.

கிளோப் அப்சர்வர்

நாசா உலகளாவிய மேகம் கண்காணிப்பு சவாலை அறிவித்துள்ளது.  இந்த பணியை  மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை, அனைத்து வயது குடிமகன் விஞ்ஞானிகளும் செய்யலாம். கிளோப் அப்சர்வர் என்ற ஆப் பை  பயன்படுத்தி  மேகங்களை கண்காணிக்கலாம். அதிக அளவில்  கண்காணிக்கும்  பங்கேற்பாளர்கள்  நாச விஞ்ஞானிகளால் பாராட்டப்படுவர்.

கிளோப் திட்டம்

அந்த வீடியோ குளோப்  திட்டத்தின் வலைத்தளத்தில் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும். இது குறித்து அமெரிக்காவில் உள்ள நாசாவின் லாங்லி ஆராய்ச்சி மையம். உலக மேக கண்காணிப்பு திட்ட  தலைவர்  மர்லி கோலோன் ரோபல்ஸ்  கூறும் போது , இந்த திட்டம் பொது மக்கள் தரையில், இருந்து மேகங்களை கண்காணிக்க வேண்டியது   எவ்வளவு  முக்கியம்  என்பதற்காக ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.  நாசா குடிமகன் விஞ்ஞான அறிஞர்களைக் கொண்டிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை மக்களுக்கு காண்பிப்பதற்காக கிளோப் திட்டம் இந்த சவாலை வழங்குகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து