முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 29 மே 2012      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா,மே. 30 -  5 -வது ஐ.பி.எல். போட்டியில் சாம்பிய ன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கொல்கத்தா நகரில் உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியி ன் அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், ஆகியோருடன்,  ஆயிரக்கணக்கான ரசிகர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புதிதாக பட்டம் வென்ற நைட் ரைடர் ஸ் வீரர்கள் மற்றும் அணி  உரிமையா ளர்கள் சென்னையில் இருந்து இரண்டு குரூப்பாக விமானம் மூலம் கொல்கத் தாவில் உள்ள என்.எஸ்.சி. போஸ் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த போது, மேற்கண்ட வரவேற்பு வழங்க ப்பட்டது. 

நள்ளிரவில் அங்கு திரண்டு இருந்த ரசிக ர்கள் கூட்டத்தைப் பார்த்து கேப்டன் கெளதம் காம்பீர் வங்காள மொழியில் நான் இந்த மண்ணின் மைந்தன் என்று கூறியதும் ரசிகர்கள் உற்சாக குரல் எழு ப்பி வீரர்களை வரவேற்றனர். 

5-வது ஐ.பி.எல். இறுதிச் சுற்றுப் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்ப ரம் மைதானத்தில் நடந்தது. இதில் கே ப்டன் காம்பீர் தலைமையிலான கொ ல்கத்தா நைட் ரடைர்ஸ் அணி கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதன் முறையாக கோப்பையை வென்றது. சென்னை அணி இரண்டு முறை கோப் பையை வென்ற அணியாகும். 

திங்கட்கிழமை நள்ளிரவு 10.30 மணியளவில் விமான நிலையத்தில் வெற்றி மகிழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டு இருந்த ரசிகர்களைப் பார்த்து உங்களது ஆதரவிற்கு மிக்க நன்றியைத் தெரிவித் துக் கொள்கிறேன் என்று கேப்டன் கா ம்பீர் தெரிவித்தார். 

விமான நிலையத்தின் வி.ஐ.பி. கேட் அருகில் நைட் ரைடர்ஸ் அணியின் சி. இ.ஓ. அதிகாரியான வெங்கி மைசூர், பயிற்சியாளர் டிரேவர் பேலிஸ் ஆகி யோரும் ரசிகர்கள் கூட்டத்தோடு வீரர் களை வரவேற்க வந்திருந்தனர். 

ஐ.பி.எல். போட்டியில் பட்டம் வென்ற கொல்கத்தா அணி குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். காம் பீர் தலைமையின் கீழ் வீரர்கள் சிறப் பாக பணியாற்றி உள்ளனர். உங்களது ஆதரவிற்காக நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தலைமைப் பயிற்சியாளர் டிரேவர் பேலிஸ் மற்றும் துணைப் பயிற்சியாளர் விஜய் டாகி யா ஆகியோருக்கும் எங்களது நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறோம் என் று வெங்கி குறிப்பிட்டார். 

சென்னை - கொல்கத்தா விமானத்தில் மொத்தம் 54 பயணிகள் வந்திருந்தனர். இதில் கொல்கத்தா அணி வீரர்கள், அவ ர்களது உறவினர்கள் மற்றும் துணை அதிகாரிகளும் வந்திருந்தனர். ஆனால் வெளிநாட்டு வீரர்கள் இதில் வரவில் லை. 

கொல்கத்தா அணியின் உரிமையாளர்களான ஷாருக்கான், ஜெய் மேத்தா மற் றும் ஜூகி சாவ்லா ஆகியோர் இரவு 11. 45 மணியளவில் வந்து சேர்ந்தனர். நள்ளிரவில் ரசிகர்கள் அளித்த உற்சாக வரவேற்பைக் கண்டு அவர்கள் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். 

இங்கு உங்களைக் காணும் போது, சந் தோசமாக இருக்கிறது. உங்களது ஆதர வால் தான் கோப்பையை வெல்ல முடிந்தது. இந்த உற்சாக வரவேற்பிற் காக முதல்வருக்கு (மம்தா பேனர்ஜி) நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் ஷாருக்கான் மற்றும் ஜூ கி சாவ்லா ஆகியோர் தெரிவித்தனர். 

கொல்கத்தா வீரர்களை வரவேற்க திரி ணாமுல் காங்ரகிரஸ் கட்சியின் அமை ச்சர்கள், கட்சித் தலைவர்கள், மற்றும் வங்காள கிரிக்கெட் சங்க அதிகாரிகள் ஆகியோரும் வந்திருந்தனர். அவர்கள் மாலைகள் மற்றும் மலர்க் கொத்துக் களுடன் காத்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்