முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ரூ. 1 கோடிக்கு விற்பனையான காளைமாடு

இந்த ஆண்டுக்கான வேளாண் கண்காட்சி பெங்களுருவில் நடைபெற்றது. இந்தாண்டுக்கான கண்காட்சியை பெங்களுரூ வேளாண் அறிவியல் பல்கலை கழகம் ஒருங்கிணைக்கிறது. நவம்பர் 11 முதல் 14 வரை நடைபெற்ற இந்த கண்காட்சி ஜிகேவிகே வளாகத்தில் நடைபெற்றது. இதில் பாரம்பரிய தானிய விதைகள், நாட்டு மாட்டு ரகங்கள், விலையுயர்ந்த பாரம்பரிய ஜாதி மாடுகள், வேளாண் கருவிகள், உழவு கருவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன. மேலும் 12 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளும் பங்கேற்றனர்.இதன் ஹை அட்ராக்சனாக விளங்கியது எது வென்றால் ஒரு நாட்டு காளை மாடு ரூ.1 கோடிக்கு விற்பனையானது என்பதுதான். போரே கவுடா என்பவருக்கு சொந்தமான மூன்றரை வயது கொண்ட Hallikar ரக காளை மாடுதான் தற்போது அதிக விலைக்கு விற்பனையாகியுள்ளது. உயர் ஜாதி நாட்டு மாட்டு ரகமான இந்த காளையின் உயிரணுவுக்கு மிகுந்த டிமான்ட் இருப்பதால் ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. இதன் உயிரணு விற்பனை மூலம் மாதம் ஒன்றிற்கு சுமார் ரூ.25 லட்சம் வரை வருவாய் வருவதாக சொல்லப்படுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்... எனவே இந்த காளைக்கு மிகுந்த தேவை இருப்பதால் விலையும் அதிகமாக உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார். பொதுவாக மாடுகள் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம் வரை தான் விலை போகும். தற்போது ரூ.1 கோடிக்கு காளை விற்பனையான சம்பவம் விவசாயிகள் மத்தியில் ஆச்சரியமாக பகிரப்பட்டு வருகிறது.

பேட்டா பைட் என்றால் என்னவென்று தெரியுமா

கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.

மேகங்களின் எடை எவ்வளவு - கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்

எப்போதாவது நீங்கள் வானத்தை பார்க்கும் போது "மேகங்களுக்கு எவ்வளவு எடை இருக்கும்?" என்று நினைத்து இருக்கிறீர்களா? பார்க்க பஞ்சு பொதி போல் காணப்பட்டாலும் மேகங்கள் எடை கொண்டவையாகும்.  சராசரியாக ஒரு மேகத்தின் எடை 1.1 மில்லியன் பவுணடுகள் ஆகும். அதாவது ஒரு மேகத்தின் எடை சராசரியாக 100 யானைகளின் எடைக்கு ஈடானதாகும்.

இந்தியாவின் மிதக்கும் சந்தை

இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.

மூட்டை பூச்சிகளை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?

இரவில் நமது தூக்கத்தை கெடுத்து கடும் எரிச்சலையும் மன உளைச்சலையும் கொடுப்பதுடன் நமது ரத்தத்தையும் பதம் பார்ப்பவை மூட்டை பூச்சிகள். இன்றை கால கட்டத்தில் நகர்ப்புறங்களில் மூட்டை பூச்சிகள் அருகிவிட்டாலும் (அதற்கு பதிலாக கொசுக்கள்) ஊரக பகுதிகளில் ஜாம் ஜாம் என்று வாழ்க்கை நடத்தியே வருகின்றன. இவை பூமி பந்தில் நெடுங்காலமாக உயிர்த்திருக்கும் ஜீவராசி என்றால் ஆச்சரியம் தானே... அதாவது மூட்டை பூச்சிகள் டினோசர்கள் வாழ்ந்த கால கட்டம் முதல் இந்த பூமியில் இருந்து வருகின்றனவாம்... அதாவது 115 மில்லியன் ஆண்டுகளாக வாழ்வதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். பார்க்க சாதாரணமாக நமது படுக்கைகளில் காணப்படும் மூட்டை பூச்்சிகளின் வரலாறு மிகவும் சிக்கலானது என்கிறது விலங்கியல் பரிணாமவியல்... என்ன சரிதானே.

கோகோ-விற்கு மாற்று.

‘கோகோ’ வில் இருந்து சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சர்வதேச அளவில் 45 லட்சம் டன் கோகோ தேவைப்படுகிறது. ஆனால் விவசாயிகளால் அந்த அளவு கோகோ சாகுபடி செய்ய முடியவில்லை. 37 லட்சம் டன் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதற்கு மாற்று வழியை கண்டுபிடிக்க பிரேசிலில் உள்ள சாவ் பாவ்லோ பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில், பலாக் கொட்டையில் இருந்து சாக்லேட் தயாரிக்க முடியும் என கண்டறிந்துள்ளனர். பலாக் கொட்டையில் சாக்லேட்டின் நறுமணம் மற்றும் சுவையுடன் கூடிய ஒரு பொருள் மறைந்து இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அதில் இருந்து சாக்லேட் தயாரிக்க பயன்படும் பொருள் உருவாக்க முடியும். இதன் மூலம் கோகோ பற்றாக்குறையால் சாக்லேட் தயாரிப்பில் ஏற்படும் பாதிப்பை தடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்