முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்து சோதனையில் தோல்வி ! ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மல்யுத்த வீரர் நரசிங் யாதவுக்கு தடை ?

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ள மல்யுத்த வீரர் நரசிங் யாதவுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் முடிவு எதிர்மறையாக வந்துள்ளாதக தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனத்தின் இயக்குநர் அறிவித்துள்ளார். இதனால் யாதவ் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
74 கிலோ கிராம் ப்ரீஸ்டைல் பிரிவில் சிறந்தவர் நரசிங் யாதவ். ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் கலந்து கொள்ளத் தேர்வாகியுள்ளார். இவர் தேர்வு செய்யப்பட்டபோதே அதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பின.

தற்போது இவரிடம் எடுக்கப்பட்ட 2 சோதனை மாதிரிகளின் முடிவுகளை நாடா எனப்படும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதில் இரு மாதிரிகளின் சோதனைகளும் நெகட்டிவ் என வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தற்போது நாடா அமைப்பின் இயக்குநர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு திட்டமிட்டு ஊக்க மருந்தை சிலர் கலந்து விட்டதாகவும், தான் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளக் கூடாது என்று சிலர் விரும்புவதாகவும் சமீபத்தில் நரசிங் யாதவ் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.

தற்போது ஊக்க மருந்து சோதனையில் நரசிங் யாதவ் தோல்வி அடைந்திருப்பதால் அவரால் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. அவருக்குப் பதில் வேறு ஒருவர் அணிக்குத் தேர்வு செய்யப்படலாம். நரசிங் யாதவுக்கு ஜூலை 5-ம் தேதி சோதனைக்கான மாதிரி எடுக்கப்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட ஏ சாம்பிள் சோதனையின் முடிவு பாசிட்டிவ் என வந்தது. ஆனால் பி சோதனையிலும் அது பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இந்த சோதனை முடிவுகள் இந்திய மல்யுத்த சம்மேளனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்