முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனமழையால் முக்கிய நதிகளில் கரைபுரண்டோடும் வெள்ளம்: ஆந்திரா, தெலுங்கானாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2016      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் - ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், வெள்ள ஆபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டை, மற்றும் தேவாலயங்கள் போன்ற பல இடங்களை வெள்ளநீர்சூழ்ந்துள்ள நிலையில் ராணுவம், பேரிடர் மீட்புக்குழுவினர் வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாத்தில் வெள்ள நீரால், பாதாள சாக்கடை திறந்திருப்பதை அறியாத நபர் ஒருவர், இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தார். இதையடுத்து, காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த நபருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஆந்திரா, தெலங்கானா, உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதேபோல், மஹாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. பாம்னி கிராமத்தில் உள்ள ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதில் பழமையான பாலம் ஓன்று வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், அந்த பகுதியில், போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கிக் காணப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்