எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இரசாயனக் கொல்லிகளை உபயோகிப்பதால் சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதோடு, இயற்கையில் வாழும் பல நன்மை செய்யும் பூச்சிகளும் அழிக்கப்படுகின்றன. மேலும், அம்மருந்துகள் விட்டுச் செல்லும் எஞ்சிய நச்சு மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே பயிர் பாதுகாப்பானது, இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமலும், பூச்சி மற்றும் நோய்களில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தாமலும், நன்மை தரும் பூச்சி மற்றும் நுண்ணுயிரிகளை அழிக்காமலும் இருக்க வேண்டும். ஆனால் உயிர் எதிர்கொல்லிகளை பயன்படுத்துவதால் அத்தகைய சூழ்நிலை சீர்கேடு ஏற்படுவதில்லை. அதுமட்டுமின்றி பூச்சி மற்றும் நோய் காரணிகளில் எதிர்ப்பு சக்தியும் தோன்றுவதில்லை. அத்துடன் இவை பயிர் வளர்ச்சியையும் அதிகரித்து விளைச்சலையும் அதிகரிக்கிறது.
இதுகுறித்து சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம் பயிர் நோயியல் துறை முனைவர் சுதா பயிர் பாதுகாப்பில் உயிர் எதிர்கொல்லிகளின் பயன்பாடு மேலும் தெரிவித்தாவது:-
சூடோமோனாஸ் கலவை : சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைக்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் கலவை என்ற விகிதத்தில் கலந்து தேவையான அளவு தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த பின்னர் தண்ணீரை வடிக்க வேண்டும். வடித்த தண்ணீரை நாற்றங்காலில் ஊற்றி விடவும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 2.5 கிலோவை 2.5 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு எக்டர்க்கு தேவையான நாற்றுகளை குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து நட வேண்;டும். நீண்ட நேரம் ஊற வைப்பதால் அதன் செயல் திறன் கூடுகிறது. நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து ஒரு எக்டருக்கு 2.5 கிலோ சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து இட வேண்டும். சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.5 சத கரைசலை நடவுக்கு பின்னர் 45 நாட்கள் கழித்து நோய்களின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.
பயிர் பாதுகாப்பில் முக்கிய பங்கு : சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் கேழ்வரகு குலை நோய்க்கு சூடோமோனாஸ் பாக்டீரியா கலவை 0.2 சத கரைசலை நோயின் தீவிரத்தைப் பொறுத்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். சூடோமோனாஸை பயன்படுத்தும் முறையில் நிலக்கடலை, எள், சூரியகாந்தி, பருத்தி மற்றும் பயறு வகைப் பயிர்கள் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் பாக்டீரியா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் நிலத்தில் இடவேண்டும். மேலும் டிரைகோடெர்மா என்ற பேரினத்தில் வெவ்வேறு வகை சிற்றினங்களான டி,விரிடி, டி ஹார்சியானம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதில் பயிர் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
டிரைகோடெர்மா : டிரைகோடெர்மா பயன்படுத்தும் முறையில் காய்கறிப் பயிர்களில் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகலுக்கு காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, மிளகாய், பாகற்காய் மற்றும் பூசணி பயிர்களில் தோன்றும் நாற்றழுகல் மற்றும் நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா பூசண கலவையை கலந்து பின்னர் விதைக்க வேண்டும். மேலும் காய்கறிப் பயிர்களில் வேரழுகல் மற்றும் வாடல் நோய்க்கு ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன்பு நிலத்தில் இட வேண்டும். மேலும் டிரைகோடெர்மா பூசண கலவை 2.5 கிலோவை தேவையான அளவு தண்ணீரில் கலந்து ஒரு எக்டருக்குத் தேவையான நாற்றுகளை அந்த கலவையில் குறைந்தது 30 நிமிடம் நனைத்து பின்னர் நடவேண்டும்.
பயன்படுத்தும் முறை : டிரைகோமெர்மா பயன்படுத்தும் முறையில் மஞ்சள் கிழங்கு அழுகலுக்கு மஞ்சள் கிழங்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடியை கலந்து விதைக்க வேண்டும். மேலும் வயலில் இடும் முறையில் ஒரு எக்டருக்கு 2.5 கிலோ டிரைகோடெர்மா பூசண கலவையை 50 கிலோ நன்கு மக்கிய சாண எரு அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
டிரைகோடெர்மா பற்றிய பயிற்சி பல்கலைக் கழகத்தில் நோயியல் துறையில் தேவையின் அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. டிரைகோடெர்மா பூசண கலவையை மற்ற பூசணக் கொல்லிகள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துடன் கலத்தல் கூடாது. இந்த பூசண கலவையை தயாரித்த நான்கு மாதங்களுக்குள் பயன்படுத்த வேண்டும். இந்த பூசண கலவையை மற்ற உயிர் உரங்களுடன் கலந்து இடலாம். இந்த பூசணம் சில பூச்சிகளை மட்டுமே கட்டுப்படுத்தும்.
மகசூலை அதிகரிக்க...: இது ஒரு சிக்கனமான முறை, இது பயிர்களின் வளர்ச்சி மற்றும் மகசூலை அதிகரிக்கச் செய்கிறது. இது விதை மற்றும் மண் மூலம் பரவும் பூசணத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது பயிர்களின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இது மண்ணிலுள்ள கனிம பொருட்களைப் பயன்படுத்தி பல மடங்காக பெருகி செடிகளுக்கு பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு தருகிறது. இது தவிர உயிரினங்களுக்;கும் தோட்டத்தில் உள்ள மண்புழுக்களுக்கும் தீமை விளைவிப்பதில்லை. மேலும் விவரங்கள் பெற சேலம், சந்தியூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையம், தொலைபேசி 0427 2422550 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம்.
முனைவர் அ.சுதா ( பயிர் நோயியல் ) முனைவர் நா. ஸ்ரீராம் ( திட்ட ஒருங்கிணைப்பாளர்).
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
அமித்ஷா அல்ல எந்த ஷாவாக இருந்தாலும் இங்கே ஆள முடியாது: முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
18 Apr 2025சென்னை, நாங்கள்இந்த உருட்டல், மிரட்டல்களுக்க எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள்அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் இங்கே ஆளமுடியாது.
-
யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரியா..? - மத்திய அரசு விளக்கம்
18 Apr 2025புதுடெல்லி : யு.பி.ஐ. பரிவர்த்தனைகளுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் எந்த ஒரு திட்டமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு
18 Apr 2025ஆலந்தூர் : சென்னை விமான நிலையத்துக்குள் பஸ்கள் சென்று வர விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என மாநகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நீரஜ் சோப்ரா முதலிடம்
18 Apr 2025தென்னாப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் போட்ச் இன்விடேஷனல் தடகள போட்டி நடைபெற்றது.
-
காயத்தால் குர்ஜப்னீத் சிங் விலகல்: பிரவீசை ஒப்பந்தம் செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
18 Apr 2025சென்னை : சி.எஸ்.கே.
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
18 Apr 2025சென்னை : சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது: வீரேந்திர சேவாக்
18 Apr 2025மும்பை : ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பதற்கான நேரம் ஏற்கனவே வந்துவிட்டது என இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் கூறியுள்ளார்.
-
வரத்து குறைவால் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை
18 Apr 2025சென்னை : கோடை வெயில் அதிகரிப்பு காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் எலுமிச்சை கிலோ ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
அதிக டாட் பந்துகள்: எதிரணிகளை திணறடிக்கும் சி.எஸ்.கே.வின் கலீல் அகமது
18 Apr 2025சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது, இந்த சீசனில் அதிக டாட் பந்துகளை வீசியவர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார்.
-
ஜெகன் மோகன் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2025அமராவதி : ஆந்திரா முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
-
ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை: கபில் சிபல் பதிலடி
18 Apr 2025புதுடெல்லி : ஜனாதிபதிக்கு தனிப்பட்ட அதிகாரம் எதுவும் இல்லை என ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சென்னையில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று முதல் இயக்கம்
18 Apr 2025சென்னை : சென்னையில் முதல் குளிர்சாதன மின்சார ரயில் சேவை இன்று தொடங்குகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2025
19 Apr 2025 -
வான்கடே மைதானத்தில் 102 சிக்சர்கள்: ரோகித் சர்மா புதிய சாதனை
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். தொடரில் வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா 102 சிக்சர்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
-
வான்கடே மைதானத்தில் ஐதராபாத் அணியை வென்று மும்பை வரலாற்று சாதனை..!
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். போட்டியில் மும்பை இண்டியன்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஐதராபாதை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.
-
ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறை: கீப்பர் செய்த தவறுக்கு நோ பால்
18 Apr 2025மும்பை : ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக கீப்பர் செய்த தவறுக்கு நோ பால் வழங்கப்பட்ட சம்பவம் ரசிகர்களை ஆச்சரியம் அடைய செய்துள்ளது.
-
இன்று ஈஸ்டர் பண்டிகை: தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
19 Apr 2025சென்னை : உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மதத்தினரால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
-
மர்ம நபர்கள் கைவரிசை: குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்
19 Apr 2025சென்னை : சினிமா நடிகையும் பா.ஜ.க. அரசியல் பிரமுகருமான குஷ்புவின் எக்ஸ் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
-
ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பு: துரை வைகோ திடீர் விலகல்
19 Apr 2025சென்னை : ம.தி.மு.க. முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார்.
-
இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார்: சீனா அறிவிப்பு
19 Apr 2025பெய்ஜிங் : சமீபத்தில் இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் சீனா கெடுபிடிகளை தளர்த்தியிருந்த நிலையில், இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயாராகவுள்ளதாக சீனா
-
நீங்கள் விர்ச்சுவல் வாரியர்ஸ்: த.வெ.க. ஐ.டி. பிரிவு நிர்வாகிகளுடன் காணொளியில் விஜய் கலந்துரையாடல்
19 Apr 2025சென்னை : தவெக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளிடம் காணொளி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாடினார்.
-
80 ஆயிரம் ஆப்கானியர்களை வெளியேற்றிய பாகிஸ்தான்..!
19 Apr 2025இஸ்லாமாபாத் : ஏப்ரல் 30 காலக்கெடுவுக்கு முன்பாக 80,000 ஆப்கானியர்களை பாகிஸ்தான் நாட்டைவிட்டு வெளியேற்றியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கனடாவில் துப்பாக்கி சூடு: இந்திய மாணவி பலி
19 Apr 2025ஒட்டாவா : கனடாவில் துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவி உயிரிழந்தார்.
-
மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்: மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசுப் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்
19 Apr 2025போபால் : மத்திய பிரதேசத்தில் மாணவர்களுக்கு மதுபானம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
-
முர்ஷிதாபாத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ஆறுதல்
19 Apr 2025கொல்கத்தா : முர்ஷிதாபாத் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் தேசிய மகளிர் ஆணைய தலைவர் விஜயா ரஹத்கர் நீங்கள் தனித்துவிடப்படவில்லை என்றும் அவ்வாறு உண