முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆலத்தூர் அரசு பள்ளியின் முப்பெரும் விழா : சென்னை உயர்நீதி மன்ற 9 நீதியரசர்கள் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 பெப்ரவரி 2017      தஞ்சாவூர்
Image Unavailable

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியம், ஆலத்தூர் அரசு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம பொது மக்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஆலத்தூர் அரசு பள்ளி ஊரக ஒன்றிய தொடக்கப்பள்ளியின் நூற்றாண்டு விழா, ஆலத்தூர் மகளிர் உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா, ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பொன் விழா என முப்பெரும் விழாவில் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதியரசராக பணியாற்றி வரும் நீதியரசர் வி.பாரதிதாசன் , நீதியரசர் எம்.சத்தியநாராயணன் , நீதியரசர் சி.டி.செல்வம் , நீதியரசர் என்.கிருபாகரன் , நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் , நீதியரசர் கே.கல்யாணசுந்தரம் , நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் , நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் , நீதியரசர் என்.பார்த்திபன் , தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் , திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சீனிவாசன் , நாகப்பட்டிணம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் நடைபெற்றது.

ஆலத்தூர் அரசுப்பள்ளியில் பயின்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசராக பணியாற்றி வரும் நீதியரசர் வி.பாரதிதாசன் அவர்களை கௌரவிக்கும் விழாவினை சிறப்பிக்கும் விதமாக சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் எம்.சத்தியநாராயணன் , நீதியரசர் சி.டி.செல்வம் , நீதியரசர் என்.கிருபாகரன் , நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷ் , நீதியரசர் கே.கல்யாணசுந்தரம் , நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் , நீதியரசர் டி.கிருஷ்ணகுமார் , நீதியரசர் என்.பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் அரசுப்பள்ளியின் பயிலும் 1500 மாணவ மாணவியர்களிடம் உரையாற்றிய நீதியரசர்கள் மாணவ மாணவியர்களுக்கு வாழ்க்கையில் நேர்மையை கடைப்பிடிப்பது பற்றியும், நல்லொழுக்கம் பற்றியும், பெண் கல்வி முக்கியத்துவம் பற்றியும் கருத்துரு வழங்கினார்கள்.

இப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 40 ஆசிரியர்களுக்கு நீதியரசர்கள் கௌரவித்தார்கள்.

இவ்முப்பெரும் விழாவில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி, வட்டாட்சியர் ரவிசந்திரன், ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன், ஆலத்தூர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மரகதம், ஏ.ஆர்.எம்.யோகநாதன், ரூஸ்வெல்ட் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்