முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு : இஸ்ரோ தலைவர் நம்பிக்கை

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு  - விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தைப் போன்ற ஆய்வுநிலையத்தை நிறுவும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்று இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்.

உலகச்சாதனை
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை ஏவி இஸ்ரோ உலகச்சாதனை படைத்தது. உலக அளவில் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள நாடுகள் மத்தியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த மைல்கல் சாதனையை சாத்தியமாக்கியுள்ளனர்.

கிரண்குமார் தகவல்
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், விண்வெளியில் ஆய்வு நிலையத்தை அமைக்கும் திறன் நமக்கு உள்ளது. அதற்குத் தேவை தொலைநோக்கு பார்வை கொண்ட திட்டமிடல் மட்டுமே என்று தெரிவித்துள்ளார். விண்வெளி ஆய்வு நிலையத்தை அமைக்க கொள்கை சார்பான முடிவெடுத்து, அதற்கான நிதியை ஒதுக்கினால் இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த திட்டத்தை செயல்படுத்த முனைவார்கள் என்றும் கிரண்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்