முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மண்டபம் முயல்தீவு கடல் பகுதியில் நூதனமாக பதுக்கி வைத்திருந்த செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முயல்தீவு கடல் பகுதியில் நூதன முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முயல்தீவு பகுதியில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்து.இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சுங்கத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ், கண்காணிப்பாளர் முனியசாமி ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் அங்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தீவினை ஒட்டிய கடல் பகுதியில் நூதன முறையில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கட்டைகளை கயிற்றால் கட்டி அடுத்தடுத்து கடலுக்குள் பதுக்கி வைத்திருந்தனர். கடல் சீற்றத்தில் செம்மரக்கட்டைகள் சிதறி சென்று விடாமல் தடுப்பதற்காக இவ்வாறு கயிறால் கட்டி போட்டுள்ளனர். மொத்தம் 30 செம்மரக்கட்டைகள் இவ்வாறு இருந்தது. இந்த கட்டைகளை மீட்ட சுங்கத்துறையினர் அதனை ஆய்வு செய்தபோது சுமார் 450கிலோ எடை இருந்தது. இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட இந்த செம்மரக்கட்டைகளை மண்டபம் பகுதியில் இருந்து தீவிற்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும், கடத்தல் பேர்வழிகள் இந்த செம்மரக்கட்டைகளை மண்டபம் கடல் பகுதியில் இருந்து வல்லத்தில் வைத்து எடுத்து வந்து தீவை சுற்றிய கடல் பகுதியில் கயிற்றால் கட்டி கடலுக்குள் போட்டுவிட்டு இரவு நேரத்தில் பெரிய படகில் வந்து எடுத்து சென்று இலங்கைக்கு கடத்த திட்டமிட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. செம்மரக்கட்டைகளை கடத்தி சென்று தீவு கடல்பகுதியில் பதுக்கி வைத்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை. இதுதொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து