முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்து நாட்டில் நிகழ்ந்த பயங்கரம்: மசூதியில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 155 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

கெய்ரோ: எகிப்து நாட்டு மசூதி ஒன்றில் தொழுகையின் போது வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 155 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதிகள் தாக்குதல்
வடக்கு செனாய் பகுதியில் மசூதியில் பயங்கரவாதிகள் வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளனர், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாதுகாப்பு படை ஆதரவாளர்கள் தொழுகையில் ஈடுபட்ட போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அல்-ரவுடாக் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 155 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனைகளில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

பாதுகாப்பு படை வீரர்கள்...
வடக்கு செனாயில் ஐ.எஸ். ஊடுருவல்காரர்களுடன் பாதுகாப்பு படை சண்டையிட்டு வருகிறது. இதுவரையில் சண்டையில் பயங்கரவாதிகள் 100 பாதுகாப்பு படை வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மூன்று வருடமாக பாதுகாப்பு படையினர் அங்கு தொடர்ச்சியாக சண்டையிட்டு வருகிறார்கள். பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை. எகிப்திய அதிபர் அப்துல் ஃபத்தா அல் சிசி தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஆலோசிக்க உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து