முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 கிராம மக்களின் ஒத்துழைப்பால் உலகிலேயே மிக பெரிய சோலார் பூங்கா கர்நாடகாவில் தொடக்கம்

சனிக்கிழமை, 3 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டம் பாவகடா அருகேயுள்ள திருமணி கிராமத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, சூரியஒளி மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் பூங்கா கர்நாடகாவில் ரூ.16,500 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் முயற்சியாலும், 5 கிராம மக்களின் ஒத்துழைப்பாலும் இந்த பெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டம், பாவகடா அருகேயுள்ள திருமணி கிராமத்தில் 2 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட, சூரியஒளி மின் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 13 ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த பூங்காவை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடங்கி வைத்தார். ரூ.16,500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்துக்கு மத்திய அரசு 20 சதவீத நிதியை ஒதுக்கியுள்ளது.

இது குறித்து சித்தராமையா கூறுகையில்,

உலகின் மிகப்பெரிய சூரிய ஒளி பூங்கா அமைப்பதற்கு கர்நாடக அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீவிரமாக முயற்சித்தது. அரசு தரப்பில் இருந்து கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கினாலும், இங்குள்ள 5 கிராம மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால் இந்த திட்டம் சாத்தியம் இல்லை. ஏனென்றால் இந்த திட்டத்துக்காக 2,300 விவசாயிகளிடம் இருந்து 13 ஆயிரம் ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு ஏக்கருக்கு ரூ.21 ஆயிரம் வீதம் 28 ஆண்டுகளுக்கு குத்தகை தொகை வழங்கப்படும். போதிய மழை இல்லாமல், விவசாயம் முழுமையாக பொய்த்து போனது. வறுமையில் வாடும் விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் 4 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து