முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைதிப் பணிகளில் ஈடுபட்ட நாடுகளுக்கு நிதியை ஐ.நா.திருப்பியளிக்க வேண்டும் இந்தியா வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 29 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

ஐ.நா. : அமைதிப் பணிகளில் ஈடுபட்ட உறுப்பு நாடுகளுக்கு சரியான நேரத்தில் நிதியை ஐ.நா. சபையானது திருப்பியளிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.

ஐ.நா. சபையில் இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் திட்டத்தின் முதல் செயலராக இருப்பவர் மகேஷ் குமார். அவர் ஐ.நா.சபையில் நடைபெற்ற ஐ.நா.வின் அமைதியை நிலைநிறுத்தும் பணிகளில் நிதியுதவி என்ற தலைப்பிலான விவாதத் தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது; உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஐ.நா. சபையானது பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு ஐ.நா.வின் உறுப்பு நாடுகள் பல உதவி வருகின்றன. இதில் இந்தியாவும் ஒன்று. ஐ.நா.வின் பணிகளுக்காக நன்கு பயிற்சி பெற்ற பல்வேறு படைகளின் உதவி, பொருள் உதவி என பலவற்றை இந்தியா வழங்கியுள்ளது. இதற்காக ஐ.நா. சபையுடன் உறுப்பு நாடுகள் ஒப்பந்தத்தைச் செய்து கொண்டுள்ளன. அந்த அமைதிப் பணிகளில் ஈடுபடும் நாடுகளுக்கு சரியான நேரத்தில் செலவழித்த நிதியைத் திருப்பியளிக்க ஐ.நா. சபையானது முயற்சி எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்தியாவுக்கு 5.5 கோடி அமெரிக்க டாலர்களை திருப்பியளிக்க வேண்டும். நாடுகளுக்கு ஐ.நா. திருப்பியளிக்கவேண்டிய தொகைகளில் இது 2-வது பெரியதாகும். கடந்த 60 ஆண்டுகளில் ஐ.நா.வின் அமைதிப் பணிகளுக்காக சுமார் 2 லட்சம் குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது. ஐ.நா.வின் 71 அமைதி வழிப் பணிகளில் இந்தியா 50-ல் பங்கேற்றுள்ளது. தற்போது நடைபெற்று வரும் 16 அமைதிப் பணி திட்டங்களில் இந்தியா 13-ல் பங்கேற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து