முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தொண்டர்கள் கொண்டாட்டம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் தொண்டர்கள் இந்த பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர்.

முன்னதாக, நேற்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கூடி இசைக் கருவிகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
ராகுல் காந்திக்கு பிறந்தாள் வாழ்த்துகள். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி அதில் குறிப்பிட்டுள்ளார். 

ராகுல் காந்தியின் 48-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சத்தியமூர்த்தி பவனில் 48 கிலோ எடை கொண்ட கேக்கை வெட்டி கொண்டாடவுள்ளனர். மேலும், இரத்த தான முகாமும் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து