முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமர் கோயில் விவகாரத்தை அரசியல் ஆக்க மாட்டோம்: உ.பி பா.ஜ.க. தலைவர் மகேந்திரநாத் பேட்டி

வியாழக்கிழமை, 22 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ,அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பா.ஜ.க. உறுதியாக உள்ளது என்றும், ஆனால், அதை தேர்தல் விவகாரமாக்க மாட்டோம் என்றும் உத்தரப் பிரதேச பா.ஜ.க மாநில தலைவர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:வரும் 2019ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் விவகாரத்தை முன்வைத்து பா.ஜ.க அரசியல் செய்யாது. பா.ஜ.க ஆளுங்கட்சியாக உள்ளதால் மக்கள் பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது. முன்பு 1989ஆம் ஆண்டு ஹிமாசலப் பிரதேசம் பாலம்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் தான் நாட்டிலேயே முதன்முறையாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான தீர்மானத்தை பா.ஜ.க நிறைவேற்றியது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் தொடர்ந்து உறுதியாகவே பா.ஜ.க உள்ளது.

ராமர் கோயில் விவகாரம் என்பது நம்பிக்கையுடனும், பக்தியுடனும் சம்பந்தப்பட்டது. இருப்பினும், ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் சட்டத்தை பின்பற்றியே பா.ஜ.கநடந்து கொள்ளும். பா.ஜ.கவுக்கு எதிராக போட்டி அரசியல் நடத்தும் கட்சிகள் ராமர் கோயில் விவகாரத்தில் மக்களை திசை திருப்ப பார்க்கின்றன. இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்து பா.ஜ.கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க நினைக்கின்றன. நாடாளுமன்றத்தில் முத்தலாக் விவகாரத்தில் எதிர்கட்சிகள் கையாண்ட விதத்தை வைத்து அவர்களது உண்மையான முகத்தை மக்கள் அறிந்து கொண்டார்கள்.உண்மையில், எதிர்கட்சிகள் வாக்குகளை பெறுவதற்காக இரட்டை வேடமிடுகின்றன. வரும் 2019ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க ராமர் கோயில் விவகாரத்தை முன்னிலைப்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து