முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் - ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக எந்தெந்த மாவட்டங்கள் எங்கு பணியாற்றுவது என்பது குறித்த பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீ்ர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர். மேலும் அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமனம் செய்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

நிர்வாகிகள் கூட்டம்

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், மற்றும் செய்தி தொடர்பாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர் செல்வம், முதல்வரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. 

அமைச்சர்கள் பங்கேற்பு

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, செல்லூர் கே. ராஜூ, வளர்மதி, ராஜலட்சுமி, கே.டி. ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்கு முன்னதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி. பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

பொறுப்பாளர்கள்...

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் 19.5.2019 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக கீழ்க்காணும் தொகுதிகளுக்கு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக பின்வரும் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் நியமிக்கப்படுகிறார்கள்.

சூலூர் தொகுதி

சூலூர் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1. கோவை புறநகர், 2. கோவை மாநகர், 3. திருப்பூர் மாநகர், 4. திருப்பூர் புறநகர், 5. நீலகிரி, 6. நாகப்பட்டினம், 7. விழுப்புரம் மாவட்டம் 8. விழுப்புரம் தெற்கு 9. திருவள்ளூர் கிழக்கு 10. திருவள்ளூர் மேற்கு 11. பெரம்பலூர் 12. தென் சென்னை வடக்கு 13. வட சென்னை வடக்கு (மேற்கு).
அரவக்குறிச்சி தொகுதி

அரவக்குறிச்சி தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1. கரூர், 2.நாமக்கல், 3. சேலம் புறநகர், 4. சேலம் மாநகர், 5. தருமபுரி, 6. திருச்சி மாநகர், 7. திருச்சி புறநகர், 8. வேலூர் கிழக்கு 9. வேலூர் மேற்கு 10. திருவண்ணாமலை வடக்கு 11. திருவண்ணாமலை தெற்கு 12. ஈரோடு மாநகர் 13. ஈரோடு புறநகர் 14. தென் சென்னை தெற்கு

திருப்பரங்குன்றம்

3) திருப்பரங்குன்றம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1.மதுரை மாநகர், 2.மதுரை புறநகர் கிழக்கு, 3. மதுரை புறநகர் மேற்கு, 4. தேனி, 5. திண்டுக்கல், 6. காஞ்சிபுரம் கிழக்கு, 7. காஞ்சிபுரம் மத்தியம், 8.  காஞ்சிபுரம் மேற்கு, 9. கிருஷ்ணகிரி கிழக்கு, 10. கிருஷ்ணகிரி மேற்கு 11. கடலூர் கிழக்கு, 12. கடலூர் மேற்கு, 13. சிவகங்கை 14. தஞ்சாவூர் வடக்கு 15. தஞ்சாவூர் தெற்கு 16. வட சென்னை தெற்கு 17. வட சென்னை வடக்கு (கிழக்கு).

ஒட்டப்பிடாரம்...

4) ஒட்டப்பிடாரம் தொகுதிக்கென ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் :

1. தூத்துக்குடி வடக்கு, 2. தூத்துக்குடிதெற்கு, 3. புதுக்கோட்டை, 4. விருதுநகர், 5. திருவாரூர், 6. திருநெல்வேலி மாநகர், 7. திருநெல்வேலி புறநகர்,  8. கன்னியாகுமரி கிழக்கு, 9. கன்னியாகுமரி மேற்கு, 10. ராமநாதபுரம், 11. அரியலூர்.

தேர்தல் பணி...

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்றுவார்கள். சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளும், அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.  இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து