முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கா‌‌ஷ்மீர் விவகாரம் பற்றி ஆலோசிக்க இஸ்லாமிய நாடுகள் மாநாடு- சவுதி அரேபியா ஏற்பாடு

திங்கட்கிழமை, 30 டிசம்பர் 2019      உலகம்
Image Unavailable

கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது.

கா‌‌ஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டு வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரிஷா முகமது குரே‌ஷியிடம் நேரில் தெரிவித்தார்.

அவர் ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்தபோது இச்சந்திப்பு நடந்தது. அப்போது, கா‌‌ஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பற்றியும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் இளவரசரிடம் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி எடுத்துரைத்தார். மாநாடு நடத்தும் தகவலை அவரிடம் இளவரசர் தெரிவித்தார். இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 57 முஸ்லிம் நாடுகளை கொண்டது ஆகும்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து