முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரு பூர்ணிமா: பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, 5 ஜூலை 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : நம்முடைய வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிய குருவிற்கு மரியாதை செலுத்தும் குரு பூர்ணிமாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் சென்று மழைக்காலம் தொடங்கும் காலத்தில் ஆனி மாதம் வரும் பவுர்ணமி ‘குரு பூர்ணிமா’வாக கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் தங்களுக்கு ஒவ்வொரு விஷயத்திலும் குருவாக திகழ்ந்திருக்கும் நபர்களுக்கு மரியாதை செலுத்தும் சிறப்பு நாளாகவும் விளங்குகிறது.  அதன்படி நேற்று குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது. 

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,  குரு பூர்ணிமாவுக்கு ஏராளமான வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய குருவிற்கு மரியாதை செலுத்தும் சிறப்பான நாளாகும் இது என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து