முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை: நடிகர் விஜய் பேட்டி

வியாழக்கிழமை, 5 நவம்பர் 2020      சினிமா
Image Unavailable

எனது தந்தை தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் பேட்டியளித்து உள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளில் அரசியல் கட்சிகள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.  இந்நிலையில், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என தகவல் வெளியானது.  விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாறுகிறது.  கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  மேலும் இந்த கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சியின் சின்னம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.  

இதுபற்றி, நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறும் பொழுது, விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவே அரசியல் கட்சி தொடங்கப்பட்டு உள்ளது.  நடிகர் விஜய் எதிர்காலத்தில் இந்த கட்சியில் இணைவாரா என்பது பற்றி அவரிடமே நீங்கள் கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.  

இந்நிலையில், நடிகர் விஜய் அளித்துள்ள பேட்டியில், எனது தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.  எனது தந்தை ஆரம்பித்துள்ள கட்சியில் இணைய வேண்டாம் என ரசிகர்களை கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து