முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் தகுதித்தேர்வு விண்ணப்பங்களை இணையதளத்தில் திருத்தம் செய்ய வாய்ப்பு

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      தமிழகம்
Teacher 2022 07 02

Source: provided

சென்னை : ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வரும் 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தகுதி தேர்வு தாள் 1-க்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும், தகுதி தேர்வு 2-க்கு 4 லட்சத்து ஆயிரத்து 886 பேரும் விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. வருகிற 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் திருத்தம் தொடர்பாக எவ்வித கோரிக்கைகளும் பரிசீலனை செய்யப்பட மாட்டாது என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து