Idhayam Matrimony

3 மாநிலங்களில் பா.ஜ.க. வெற்றி: பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவீன் பட்நாயக்

திங்கட்கிழமை, 4 டிசம்பர் 2023      இந்தியா
naveen-patnaik

புதுடெல்லி, மூன்று மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் மோடிக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்தார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் சமீபத்தில் நடைபெற்றன. மிசோரம் தவிர மற்ற நான்கு மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் (டிச.3) அறிவிக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க.வெற்றி பெற்றது.

இதனையடுத்து ஒடிசா முதல்வரும், பிஜூ ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடிக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததாக ஒடிசா மாநில முதல்வர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் இந்த தேர்தல் வெற்றிகள் ஒடிசா மாநிலத்தில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று பிஜூ ஜனதா தளம் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

பிஜூ ஜனதா தளம் கட்சியின் எம்.பி. அமர் பட்நாயக், “எந்த மாநிலத்திலும் நவீன் பட்நாயக் அளவுக்கு ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை. எனவே சமீபத்தில் வெளியான தேர்தல் முடிவுகள் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா மாநிலத்தில் சிறு தாக்கத்தைக் கூட ஏற்படுத்தாது.” என்று கூறியுள்ளார். 147 தொகுதிகளைக் கொண்ட ஒடிசா மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு 2000-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து