எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டது மாநிலம் முழுக்க அதிர் வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் பெண் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. குற்றங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. குற்றவாளி தி.மு.க.வில் இருந்தது எங்கள் கோபம் இல்லை. தி.மு.க.வில் இருந்துகொண்டு தான் தொடர் குற்றங்களை செய்துள்ளார் அவர். தி.மு.க. எனும் போர்வை இருந்ததால்தான் இந்த குற்றவாளி அந்த பெண் மேல் கை வைத்துள்ளான்.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டி.வி. கேமரா இல்லை என்று சொல்வது வெட்கமாக இல்லையா? சி.சி.டி.வி. கேமராவுக்கு செல்லும் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக கூற வெட்கமாக இல்லையா?. நிர்பயா நிதி ஒதுக்கப்பட்டும் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டி.வி. கிடையாது. நான் காவல்துறையில் இருந்திருந்தால் நடவடிக்கை வேறுவிதமாக இருந்திருக்கும்.
படிக்காதவன் கூட ஒழுங்காக எப்.ஐ.ஆர் எழுதுவான். அந்த பெண்தான் குற்றம் செய்ததுபோல் அந்த எப்.ஐ.ஆரை எழுதியுள்ளார்கள். அதை எழுதியவருக்கு வெட்கமாக இல்லை. அந்த பெண்ணின் விபரங்களை எல்லாம் கூறி அந்த பெண்ணின் குடும்பத்தையே நாசம் பண்ணிவிட்டீர்கள். அந்த மாணவியை அவமானப்படுத்திவிட்டனர். கோர்ட்டில் இந்த முதல் தகவல் அறிக்கை ஏற்கப்படுமா? முதல் தகவல் அறிக்கை எப்படி கசிந்தது?
விரச கதைகளைப் போன்று காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளனர். மாணவியை அவமானப்படுத்த பெயர் வெளியிடப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆர். எப்படி வெளிவந்தது? காவல் துறையினரை தவிர வேறு யார் வெளியிட முடியும்.
நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் நீங்கள் கைது பண்ணுவீர்கள். நாளையில் இருந்து ஆர்ப்பாட்டம் அப்படி ஒன்று நடக்காது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு மாநிலத்தில் அரசியல் கட்சிக்கு இனி மரியாதை இல்லை. ஆரோக்கியமான அரசியல், நாகரீகமான அரசியல், விவாதம், மரியாதை எல்லாம் இருக்காது. எதுக்கு அரசியல் கட்சியினருக்கு மரியாதை கொடுக்க வேண்டும், இனி மரியாதையெல்லாம் கிடையாது.
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன். நாளையில் இருந்து 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன்; விரதம் இருந்து முருகனிடம் முறையிடப் போகிறேன். இந்த விவகாரத்தில் நாம் எல்லோருமே சாமானிய மனிதர்களாக தலை குனிந்து நிற்க வேண்டும் என்று அவர் கூறினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் முடிவில் அண்ணாமலை, தனது கால்களில் இருந்த ஷூக்களையும் கழற்றிவிட்டு வெறுங்காலுடன் நடந்து சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்3 months 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம்
26 Dec 2024சண்டிகர், 2.6 ரிக்டர் அளவில் அரியானாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் செருப்பு போட மாட்டேன் பா.ஜ.க. அண்ணாமலை பரபரப்பு பேட்டி
26 Dec 2024சென்னை: தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு போட மாட்டேன் இன்று முதல் 48 நாட்கள் விரதம் இருக்கப்போகிறேன் என பா.ஜ.க.
-
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது: தமிழகத்தில் 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2024சென்னை: தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாவக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை: தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்கிறது
26 Dec 2024சென்னை: மாணவி வன்கொடுமை வழக்கில் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது தேசிய மகளிர் ஆணையம்.
-
சபரிமலை கோவில் மண்டல காலம் நிறைவு வரும் 30-ம் தேதி மீ்ண்டும் திறப்பு
26 Dec 2024திருவனந்தபுரம்: மண்டல காலம் நிறைவுவையொட்டி சபரிமலை கோவிலில் மீ்ண்டும் வருகிற 30-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.
-
நாள் முழுவதும் அன்னதான திட்டம் விரிவாக்கம்: மதுரை மற்றும் கோவை கோயில்களில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
26 Dec 2024சென்னை, கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை மதுரையில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோவை மருதமலை முருகன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டத்தை கா
-
அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2024சென்னை, ஸ்ரீவைகுண்டத்தில் அமையவிருக்கும் புதிய அரசு மருத்துவமனைக்கு நல்லக்கண்ணு பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவு
26 Dec 2024சென்னை, பொங்கல் பண்டிக்கைக்கு வழங்க வேட்டி, சேலைகளை ரேசன் கடைகளுக்கு ஜன.10-க்குள் அனுப்ப கைத்தறித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
மாணவி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வழியுறுத்தல்
26 Dec 2024சென்னை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தி.மு.க. அரசின் பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
-
சென்னை புத்தகக் கண்காட்சி: இன்று துவக்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
26 Dec 2024சென்னை, வரும் 12-ம் தேதி வரை நடைபெறவுள்ள சென்னை புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
-
திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்
26 Dec 2024திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
-
திருப்பதி சொர்க்க வாசல் தரிசனம்: 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன்கள் பெற ஏற்பாடு
26 Dec 2024திருமலை: திருப்பதி சொர்க்க வாசல் தரிசனத்திற்காக 91 கவுண்டர்களில் பக்தர்கள் டோக்கன் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
ஒடிசாவில் மருத்து மாணவர் தற்கொலை
26 Dec 2024புவனேஸ்வர், ஒடிசாவில் நிதி நெருக்கடி காரணமாக மருத்துவ மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
200 தொகுதிகளை தாண்டி வெல்லும் நிரந்தர கூட்டணி தி.மு.க. கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
26 Dec 2024சென்னை, “தி.மு.க.
-
பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: ஆப்கானில் பலி 46 ஆக உயர்வு
26 Dec 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கொடூர தாக்குதலால் ஆப்கனில் பலி எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
-
கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடும் கண்டனம்
26 Dec 2024வாஷிங்டன், கிறிஸ்துமஸ் நாளில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்யாவுக்கு அதிபர் ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் பேட்டி
26 Dec 2024சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருது ஜனாதிபதி திரெளபதி வழங்கி கவரவிப்பு
26 Dec 2024புதுடெல்லி: கலை, விளையாட்டு உள்ளிட்ட 7 பிரிவுகளில் சாதனை படைத்த சிறுவர்கள் 17 பேருக்கு பால புரஸ்கார் விருதை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
அ.தி.மு.க.வில் அதிக இளைஞர்களை சேர்க்க கடுமையாக உழைக்க வேண்டும்: நிர்வாகிகளுக்கு வேலுமணி அறிவுறுத்தல்
26 Dec 2024திண்டுக்கல், திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.
-
சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினம்: புதுச்சேரி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி
26 Dec 2024புதுச்சேரி, சுனாமி 20-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி கடலில் பால் ஊற்றி துணைநிலை கவர்னர், முதல்வர், அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
-
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் பரபரப்பு தகவல்
26 Dec 2024நெல்லை: அரசாங்கத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளையும் தடுக்க முடியாது என்றும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.&
-
மத்திய பிரதேசத்தில் சோகம்: மின் கோபுரம் சரிந்து 3 பேர் பலி
26 Dec 2024போபால்: மத்திய பிரதேசத்தில் உயர் மின் கோபுரம் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 தொழிலாளர்கள் பலி உயிரிழந்தனர். 6 பேர் காயம் அடைந்தனர்.
-
20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினம்: தமிழக கவர்னர் ரவி அஞ்சலி
26 Dec 2024சென்னை, 20-ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று நொச்சிக்குப்பம் கடற்கரையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அஞ்சலி செலுத்தினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2024.
26 Dec 2024 -
பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்
26 Dec 2024புதுடெல்லி, பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.