முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: கைதானவருக்கும், எங்களுக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் பேட்டி

வியாழக்கிழமை, 26 டிசம்பர் 2024      தமிழகம்
Durai-Murugan 2024-12-03

Source: provided

சென்னை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான நபருக்கும், தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து ஞானசேகர் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து சென்னையில் நேற்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் கைதான நபர் தி.மு.க. அமைச்சர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியான நிலையில், இது குறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அமைச்சர்களுடன் யார் வேண்டுமானாலும் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியும் என்றும், கைதான நபர் தி.மு.க. நிர்வாகி என்று பரப்பப்படும் தகவல் தவறானது என்றும் விளக்கமளித்தார்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வேலூரில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், கைதான நபர் பிரியாணி கடைக்காரர் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த நபருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து