முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை: முதலிடத்திற்கு முன்னேறிய இந்திய வீரர் ரவி பிஷ்னோய்

புதன்கிழமை, 6 டிசம்பர் 2023      விளையாட்டு
Ravi-Bishnoi 2023-12-06

Source: provided

துபாய் : ஐ.சி.சி. டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர். ஆப்கான் வீரர் ரஷித் கானை பின்னுக்குத்தள்ளி முன்னேறியுள்ளார்.

ஐ.சி.சி. வெளியீடு...

ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை நேற்று ஐ.சி.சி. வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்துள்ளார். பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் பிஷ்னோய் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.

தொடர் நாயகன்... 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முறையே சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகின்றனர்.

முன்னாள் வீரர்...

சுழல் ஜாம்பவான் இலங்கையின் முன்னாள் வீரர் முரளிதன் தெரிவிக்கையில்., வழக்கமான 'லெக் ஸ்பின்' பவுலர்களில் இருந்து வித்தியாசமா காணப்படுகிறார் ரவி பிஷ்னோய். பந்தை வேகமாக வீசுகிறார், எங்கு, எப்படி வருகிறது என கணிப்பதற்குள் வந்து விடுகிறது. இவரை 'டி-20' உலக கோப்பைக்கான அணியில் சேர்க்க வேண்டும். அக்சர் படேல்பந்தை அதிகமாக சுழற்றவில்லை என்றாலும் துல்லியமாக வீசுகிறார் என்று பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து