முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: முன்னாள் செனட் உறுப்பினர் உள்பட 5 பேர் உயிரிழப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      உலகம்
Pak-2024-07-04

லாகூர், பாகிஸ்தானில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் செனட் உறுப்பினர் இதயத்துல்லாகான் உட்பட 5 பேர் பலியாகினர். 

பாகிஸ்தானில் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் பஜாவர் பகுதியில் தமடோலா என்ற இடத்தில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்க செய்யப்பட்டது. 

முன்னாள் செனட் உறுப்பினரான இதயத்துல்லா கான், தமடோலா பகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு புறப்பட்டு சென்ற போது, அவருடைய காரை இலக்காக கொண்டு நடந்த இந்த தாக்குதலில், அவர் உயிரிழந்து உள்ளார்.  அவருடன் 4 பேர் பலியாகி உள்ளனர்.  இதனால், மொத்தம் 5 பேர் மரணம் அடைந்து உள்ளனர். 

எனினும், இந்த தாக்குதலுக்கு ஒருவரும் பொறுப்பேற்க முன்வரவில்லை.  இது பற்றி அனைத்து வகையிலும் விசாரணை நடத்தி அது பற்றிய அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என கைபர் பக்துன்குவா மாகாண முதல்வர் அலி அமின் கந்தப்பூர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தாக்குதல் ரிமோட் கண்ட்ரோல் முறையில் நடத்தப்பட்டு உள்ளது என கூறியுள்ள அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி சர்தாரி சம்பவத்திற்கு கண்டனமும், இரங்கலும் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து