முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச ராணுவ தளபதியை சந்தித்து பேசிய இந்திய கடற்படை தலைவர்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      உலகம்
India--Bangladesh--Chief-20

டாக்கா, இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி  வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து பேசினார். 

வங்காளதேசத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி நேற்று முன்தினம் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார். அப்போது இந்திய கடற்படைக்கும் வங்காளதேச கடற்படைக்கும் இடையிலான இருதரப்பு கடல்சார் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து சி.என்.எஸ். அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி பிரதமரிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் அட்மிரல் தினேஷ் கே.திரிபாதி  வங்காளதேச ராணுவத் தலைமையகமான டாக்காவில், ராணுவ தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானை சந்தித்து உரையாடினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வலுவான உறவுகள் குறித்து இருவரும் விவாதித்தனர். 

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு இடையேயான பயிற்சி மற்றும் கூட்டுப் பயிற்சிகளில் கூடுதல் வழிகள் குறித்து விவாதித்தனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து