முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியை சந்தித்து சந்திரபாபு நாயுடு பேச்சு: ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Chandrababu-Naidu 2024-06-2

திருப்பதி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கு வரி சலுகை வழங்க வலியுறுத்தி  உள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் அமராவதியை தலைநகராக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். தற்போது ஆந்திர மாநிலம் நிதிச்சுமையால் திண்டாடி வருகிறது.இந்த நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் டெல்லி சென்றார். 

அதை தொடர்ந்து அவர் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நடந்தது. ஆந்திரா தொடர்பான பல முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. போலாவரம், அமராவதி தலைநகர் கட்டமைப்பு பணி குறித்து சந்திரபாபு நாயுடு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். 

மேலும் ஆந்திராவுக்கு வரிச் சலுகை கூடுதல் நிதி தேவை என சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். 

இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அமித் ஷா ஆகியோரை நேற்று சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். 

இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசுகிறார். ஆந்திர மாநிலத்தில் நிலுவையில் உள்ள போலவரம் உள்ளிட்ட நீர்ப்பாசன திட்டங்கள், அமராவதி தலைநகர் திட்டம், மாநில நெடுஞ்சாலைகள், சாலைகள் உள்ளிட்ட உள் கட்டமைப்புகளின் நிலை குறித்து டெல்லி செல்வதற்கு முன்பாக அதிகாரியுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை ஒன்றை சந்திரபாபு நாயுடு தயார் செய்தார்.

மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நிதி குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த நீண்ட பட்டியலுடன் அவர் டெல்லியில் சந்திரபாபு நாயுடு முகாமிட்டுள்ளார். 

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின்போது ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ,ஆந்திர மாநிலத்திற்கு கூடுதல் நிதி சலுகைகள் மற்றும் வரி சலுகைகளை சந்திரபாபு நாயுடு கேட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து