முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்.கே. அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Advani 2024-02-03

புது டெல்லி, பா.ஜ.க.மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான எல்.கே.அத்வானிக்கு கடந்த ஜூன் 26-ம் தேதி திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

96 வயதான எல்.கே.அத்வானிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக துறை மற்றும் முதியோர் பிரிவு சிறப்பு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த  27-ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் எல்.கே.அத்வானி உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அவர் டெல்லி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து