முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய மருத்துவ ஆணைய தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமனம்: மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Gangadar-2024-07-04

புது டெல்லி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இது பற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

நாட்டில் செயல்பட்டு வரும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தன்னாட்சி வாரியத்தின் பல்வேறு பதவிகளுக்கான ஆட்களை, அமைச்சரவையின் நியமன கமிட்டி நியமனம் செய்துள்ளது.  

இதன்படி, தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவராக டாக்டர் பி.என். கங்காதர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபற்றிய அறிவிப்பை மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது.  

பணியமர்த்தப்பட்ட நபர்கள் 4 ஆண்டுகள் பணி நியமனத்தின்படி, அந்த நபர் 70 வயது நிறைவடையும் வரை அல்லது அடுத்த உத்தரவு வெளிவரும் வரை, இதில் எது முன்பே வருமோ அதுவரை அவர்கள் பதவியில் நீடிக்க முடியும்.

தேசிய மருத்துவ ஆணையமானது, நாட்டில் தரம் வாய்ந்த மருத்துவ கல்வி கிடைப்பதற்கான வழிகளை மேம்படுத்துவது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக தரமிக்க மருத்துவ அதிகாரிகள் போதிய அளவில் இருக்கிறார்கள் என உறுதி செய்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட இந்த ஆணையம், கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி முதல் செயல்பாட்டில் உள்ளது.  இதன் இடைக்கால தலைவராக டாக்டர் கங்காதர் இருந்து வந்த நிலையில், அவர் முறைப்படி தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து