முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்னி வீரர் குடும்பத்துக்கு இழப்பீடு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் விளக்கம்

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      இந்தியா
Indian Army

புது டெல்லி, அக்னிவீரர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கும் விவகாரம் தொடர்பாக ராகுல்  காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. 

பாராளுமன்ற மக்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அக்னிவீரர் திட்டத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். அக்னிவீரர் திட்டத்தில் சேருபவர்களை அரசாங்கம் உபயோகப்படுத்தி கொண்டு தூக்கி எறிகிறது என்றார். 

மேலும் உயிர்த்தியாகம் செய்த அக்னிவீர் வீரரை தியாகி என்று அழைக்கப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், பாதுகாப்பு பணியின் போது உயிரிழந்த அக்னி வீரர் அஜய்-யின் குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  

மக்களவையில் ராகுலின் இந்த உரையின்போது குறுக்கிட்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பணியில் உயிரிழக்கும் வீரா்களின் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு கோடி இழப்பீடு வழங்கப்படுகிறது என்றும் ராகுல் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது என்றும்  கூறினார்.  

இந்நிலையில், அஜய் மறைவுக்கு எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்ற அவரது தந்தை கூறுவதைப் போன்ற வீடியோவை ராகுல்  காந்தி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு இருந்தார். 

மேலும், அக்னிவீரா் இழப்பீடு விவகாரம் தொடா்பாக மக்களவையில் தவறான தகவல்களைத் தெரிவித்த ராஜ்நாத் சிங், அக்னி வீரா்களிடமும் நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.   

இந்த நிலையில்,  ராகுலின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

அக்னிவீரா் அஜய்யின் தியாகத்துக்கு ராணுவம் மரியாதை செலுத்துகிறது. அக்னிவீரா் உள்பட வீரமரணமடையும் அனைத்து வீரா்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு மிக விரைவாக வழங்கப்படுவதை ராணுவம் வலியுறுத்துகிறது. 

அஜய் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை என்று சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்படுகிறது. வீரரின் இறுதிச் சடங்குகள் முழு ராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கு ஏற்கெனவே ரூ. 98.39 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

அக்னிபத் திட்ட விதிகளின்படி, வீரா் குடும்பத்தினருக்கு இன்னும் செலுத்தப்பட வேண்டிய மீதி தொகையான ரூ. 67 லட்சமும் காவல் துறை சரிபாா்ப்புக்கு பின் விரைவில் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து