முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீங்கள் நலமா? திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2024      தமிழகம்
CM-1-2024-07-04

சென்னை, சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் நேற்று வீடியோ காலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், நீங்கள் நலமா உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசி விவரங்களை கேட்டறிந்தார். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தொடங்கப்பட்ட திட்டம் தான், மக்களைத் தேடி மருத்துவம். இத்திட்டத்தை, 2021 ஆகஸ்ட் 5-ம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி என்ற கிராமத்தில் அவர் தொடங்கி வைத்தார். 

தொற்றா நோய்களான சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று, மாதந்தோறும் மருந்து, மாத்திரைகள் வழங்குவதுதான் இத்திட்டத்தின் நோக்கமாகும். 

பெண்களின் சுயமரியாதையை காக்கவும், அவர்களது உழைப்பை அங்கீகரிக்கும் வகையிலும் தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. மகளிருக்கு உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் அரசு திட்டங்களின் பயன்கள் குறித்து முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலர், துறைசெயலர்கள் ஆகியோர் பொதுமக்களிடம் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு கேட்டறியும் நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதல்வர்  மு.க.ஸ்டாலின் கடந்த 6-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இதையடுத்து சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து அரசு திட்ட பயனாளிகளிடம் வீடியோ காலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பேசினார். மகளிர் உரிமைத்தொகை, மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்ட பயனாளிகளிடம் பேசினார். 

முதல்வரின் முகவரி துறையின் நீங்கள் நலமா திட்ட பயனாளிகளுடன் வீடியோ காலில் பேசி கருத்துகளை கேட்டறிந்தார். பல்வேறு திட்டங்களின் கீழ் பயன்பெற்றவர்களை தொடர்பு கொண்டு முதல்வர் பேசினார்.

பயனாளிகளிடம் திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களை கேட்டறிந்த முதல்வர், அரசு செயல்படுத்தும் திட்டங்கள் சரியான நேரத்திற்கு வந்து சேர்கிறதா, எந்த தேதியில் பணம் வருகிறது, எவ்வளவு தொகை வருகிறது, எந்த வகையாக  வந்தடைகிறது, ஏதேனும் குறை உள்ளதா, அலுவலகத்தில் அதிகாரிகள் நன்றாக நடத்து கொள்கிறார்களா? என்ற விவரங்களை கேட்டறிந்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து